கேள்விக்குறியான தோனியின் எதிர்காலம்?

23 March 2020 விளையாட்டு
dhoniretirement.jpg

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் மகேந்திர சிங் தோனியின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

கடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின், அரையிறுதியில் இந்திய அணியானது தோல்வியினைத் தழுவியது. அந்த ஆட்டத்தில், கடுமையாகப் போராடிய தோனி, ரன் அவுட் ஆகி வெளியேறினார். அது தான், அவர் விளையாடிய கடைசி கிரிக்கெட் போட்டியாகும். அன்று தொடங்கி தற்பொழுது வரை, கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெறாமல் இருந்து வருகின்றார். அவருடையப் பெயரினை, கான்ட்ராக்ட் பட்டியலில் இருந்து, பிசிசிஐ நீக்கிவிட்டது. இதனால், அவர் இந்திய அணிக்கு விளையாடுவது கேள்விக்குறியாகி உள்ளது.

மேலும் இது குறித்து பிசிசிஐ சேர்மன் சௌரவ் கங்குலி கூறுகையில், பட்டியலில் இல்லாத வீரர்கள் கூட, இந்திய அணிக்காக விளையாடி உள்ளனர். அதனால், இது குறித்து சர்ச்சைகளை கிளப்ப வேண்டாம் என்று கூறியுள்ளார். தற்பொழுது இந்த மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் போட்டிகளில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக, தோனி விளையாடுவார் என, எதிர்பார்க்கப்பட்டது.

அவரும், தற்பொழுது தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இருப்பினும், கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக, ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டு உள்ளன. இதனால், தோனியின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்தில் உள்ளனர். ஒருவேளை, ஐபிஎல் போட்டிகள், இந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்டால், தோனியால் கிரிக்கெட் விளையாட முடியாது. அதனை வைத்து, மீண்டும் இந்திய அணிக்குத் திரும்புவதும் கேள்விக்குறியாகி உள்ளது.

கிட்டத்தட்ட தோனியின் கிரிக்கெட் சகாப்தம் முடிந்தவிட்ட நிலையில், கடைசியாக அவர் உலகக் கோப்பை டி20 போட்டிகளில் விளையாடுவாரா என்றக் கேள்வியும் எழுந்துள்ளது.

HOT NEWS