முதல் டெஸ்ட் 203 ரன்களுக்கு ஆறு விக்கெட் இழந்து இந்தியா ஆட்டம்!

23 August 2019 விளையாட்டு
indvswi.jpg

மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி, தற்பொழுது டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளை விளையாடி முடித்துள்ளது. இந்நிலையில் தற்பொழது டெஸ்ட் போட்டியில் விளையாட ஆரம்பித்துள்ளது.

நேற்று ஆரம்பித்த முதல் போட்டியில், டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஆண்டிகுவாவில் நடைபெற்ற இப்போட்டியில், இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 68.5 ஓவர் முடிவில், 6 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் குவித்துள்ளது.

இந்திய அணியின் வீரர்கள் லோகேஷ் ராகுல் 44, மயங்க் அகர்வால் 5, சத்தீஷ்வர் புஜாரா 2, விராட் கோலி 9, அஜிங்கியா ரஹானே 81, ஹனுமா விஹாரி 32, ரிஷாப் பண்ட் 20, ரவீந்திரா ஜடேஜா 3 ரன்கள் எடுத்துள்ளனர். பெரிய அனுபவம் இல்லாத வீரர்கள் தற்பொழுது இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி இவ்வளவு ரன்கள் சேர்த்துள்ளதே, சற்றுப் பெரிய விஷயமாகப் பார்க்கப்படுகிறது.

மேற்கு இந்திய அணிகள் சார்பில், ரோச் 3, கேப்ரியல் 2 மற்றும் சேஸ் ஒரு விக்கெட்டினை வீழ்த்தியுள்ளனர். ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், மழைக் குறுக்கிட்டதால், விளையாட்டுத் தடைபட்டுள்ளது.

இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற உள்ள நிலையில், மழை மேகம் சூழ்ந்துள்ளதால், ஆட்டம் நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

HOT NEWS