300 கோடி வசூல் செய்துள்ள வார் திரைப்படம்!

21 October 2019 சினிமா
warreview.jpg

நடிகர் ஹிருதிக் ரோசன், டைகர் ஷெராப் நடித்துள்ள திரைப்படம் வார். இத்திரைப்படம், கடந்த அக்டோபர் 2ம் தேதி வெளியானது. படம் வெளியாகி, கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ஹிந்தி மொழியில் சிறந்த வரவேற்பினைப் பெற்றுள்ளது.

ஹிருதிக் ரோசனுக்கு என்றே, தனி ரசிகர்படை உள்ளது. அவர்களுக்கு விருந்து அளிக்கும் வகையில், இந்தப் படம் இருந்ததால் இப்படம் வசூலில் பல சாதனைப் புரிந்து வருகின்றது.

இப்படம், முதல் நாளிலேயே 51.60 கோடி ரூபாயை வசூல் செய்து அசத்தியது. தொடர்ந்து, இப்படம் வசூல் மழையில் நனைந்து வருகின்றது. இன்று, பாலிவுட் விமர்சகர்கள் மற்றும் சினிமாத் துறையினர் வார் திரைப்படம், சுமார் 300 கோடி ரூபாயினை வசூல் செய்துள்ளதாக அறிவித்துள்ளனர்.

இருப்பினும், இது பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகவில்லை. இப்படத்தினை யாஷ் ராஜ் பிலிம்ஸ், நிறுவனம் தயாரித்தது. அவர்கள் தயாரித்த, தூம் 3, சுல்தான், டைகர் ஜிந்தா ஹேய், தக்ஸ் ஆஃப் ஹிந்துஸ்தான் படங்களை அடுத்து இப்படமும் ஐந்தாவதாக, நூறு கோடி ரூபாய் வசூல் பட்டியலில் இடம்பிடித்துள்ளது.

HOT NEWS