தோனி அனைவருக்கும் அதிக வாய்ப்புகள் வழங்குவார்! ஷேவாக் புகழ்ச்சி!

25 January 2020 விளையாட்டு
virendarsehwag.jpg

மகேந்திர சிங் தோனி, கேப்டனாக இருக்கும் பொழுது அனைத்து வீரர்களுக்கும் சரியாக வாய்ப்புகளை வழங்குவார் என, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவிற்கு எதிரானப் போட்டியில், இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றது. இதனையடுத்து, இந்திய அணி தற்பொழுது நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப் பயணம் சென்றுள்ளது. இதில், கே எல் ராகுல் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டு விளையாடி வருகின்றார். இதற்கு முன்னதாக ரிஷாப் பண்ட் விக்கெட் கீப்பராக இருக்கும் பொழுது, சரியாக விளையாடாததால் அவரை அணியில் இருந்து நீக்கினர்.

இதனிடையே, கே எல் ராகுல் தற்பொழுது பேட்டிங் வரிசையில் 5வது வீரராக களமிறக்கப்படுகின்றார். இதனால், அவரால் சரியாக தன்னுடைய பேட்டிங் திறமையை வெளிப்படுத்த முடியவில்லை. இது குறித்து, கருத்துத் தெரிவித்துள்ள ஷேவாக், வீரர்களுக்கு சரியான வாய்ப்புகளை வழங்க வேண்டும். அப்படி வழங்காமல், ஒரு ஓரமாக உட்கார வைப்பதன் காரணமாக, அவர்களால் பெரிய வீரர்களாக மாற முடியாது. தோனி, அனைத்து வீரர்களுக்கும் சரியான வாய்ப்புகளை வழங்கினார் எனக் கூறியுள்ளார்.

HOT NEWS