ஆர்சிபி அணிக்கு புதிய லோகோ! விராட் கோலி கருத்து!

15 February 2020 விளையாட்டு
rcbnewlogo.jpg

வெள்ளிக் கிழமையான நேற்று(14-02-2020) , ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தன்னுடைய அதிகாரப்பூர்வ புதிய லோகோவினை அறிமுகப்படுத்தி உள்ளது. இதற்கு, அந்த அணியின் கேப்டன் விராட் கோலி தன்னுடையக் கருத்தினைத் தெரிவித்து உள்ளார்.

தொடர்ந்து பல தொடர்களில், தோல்விகளை மட்டுமே பெற்று வந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. அந்த அணிக்காக விளையாடியப் பல வீரர்களை, அந்த அணியில் இருந்து நீக்கியது. ஆனால், அந்த வீரர்கள் மற்ற அணிகளுக்குச் சென்று சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி வந்தனர். இந்நிலையில், அணியில் பல மாற்றங்களை இந்த முறை செய்ய உள்ளோம் என, அந்த அணியின் நிர்வாகம் தெரிவித்தது.

இதனையடுத்து, முதற்கட்டமாக, அந்த அணியின் வீரர்களை மாற்றி அமைத்துள்ளது. அத்துடன், புதிய சர்ப்ரைஸ் ஒன்று இருப்பதாகவும் கூறியது. இதனால், அனைத்து ஆர்சிபி ரசிகர்களும் உற்சாகம் அடைந்தனர். இந்நிலையில், நேற்று காதலர் தினத்தினை முன்னிட்டு, அந்தணியானது தன்னுடைய புதிய குறியீட்டினை வெளியிட்டது.

இது குறித்துத் கருத்துத் தெரிவித்துள்ள கேப்டன் விராட் கோலி, புதிய லோகோவினைப் பார்க்க த்ரில்லிங்காக உள்ளது என்று, தன்னுடைய டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ளார். இது பார்ப்பதற்கு, கம்பீரமாகவும், உற்சாகமளிப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஐபிஎல்2020 விளையாட்டிற்கு, காத்திருக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS