வனிதாவை வெளுத்து வாங்கிய உலகநாயகன்! பிக்பாஸில் ருசிகரம்!

08 September 2019 சினிமா
vanithakamal.jpg

pic credit:youtube/vijaytelevision

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியின் பொழுது, நடிகை வனிதாவை கமல்ஹாசன் ஒரு பிடிபிடித்துவிட்டார் என்று தான் கூற வேண்டும். அதற்கு ரசிகர்களும் தங்களுடைய ஆதரவையும், வாழ்த்துக்களையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

பொதுவாக, பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரையும், பெரிய அளவில் கேட்கமாட்டார் நம்ம உலகநாயகன். ஒரு வேளைக் கேள்விக் கேட்டாலும், கண்டுகொள்ளாமல், அடுத்த ஆளிடம் சென்றுவிடுவார். இந்நிலையில், நேற்று நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில், வனிதாவிடம் கேள்வி மட்டுமல்ல, அவருடைய பாணியில் கலாய்த்தும் விட்டார் என்று தான் கூற வேண்டும்.

HOT NEWS