வடசென்னை-2 விரைவில்! வதந்திகளை நம்ப வேண்டாம் தனுஷ் கோரிக்கை!

15 July 2019 சினிமா
vadachennaireview.jpg

வடசென்னை படம் குறித்து, வெளியாகி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என நடிகர் தனுஷ், தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் செய்துள்ள டிவிட்டில், எது என்னுடைய ரசிகர்களின் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியிது என்று தெரியவில்லை. வடசென்னை பாகம் இரண்டு விரைவில் தயாராக உள்ளது. அதே சமயம், என்னுடைய டிவிட்டரில் தகவல்கள், அதிகாரப்பூர்வமாக வெளியாகும் வரை காத்திருங்கள். தயவு செய்து, என்னுடைய படம் குறித்து வரும், வதந்திகளை நம்ப வேண்டாம். நன்றி என தெரிவித்துள்ளார்.

தற்பொழுது இவர் செய்துள்ள டிவிட்டால், வடசென்னை-2 விரைவில் வர உள்ளது என்பது உறுதியாகி உள்ளது.

HOT NEWS