வானம் கொட்டட்டும் திரைவிமர்சனம்!

12 February 2020 சினிமா
vaanamkottatum.jpg

நீண்ட இடைவெளிக்குப் பிறகு, சரத்குமார் நடித்திருக்கும் திரைப்படம் வானம் கொட்டட்டும். தன்னுடைய மனைவி, ராதிகா சரத்குமாருடன் இணைந்து, நடிகரும், அரசியல்வாதியுமான சரத்குமார் நடித்துளார். இந்தப் படத்தில், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஒரு குடும்பப் படத்திற்குத் தேவையான, அனைத்து விஷயங்களும் இந்தப் படத்தில் இருப்பதான் இந்தப் படத்தின் மிகப் பெரிய பலமே. அதனை, சரியாகப் பயன்படுத்தி இருக்கின்றார் இயக்குநர் தனா. இந்தப் படத்தின் மூலம், மீண்டும் வெற்றிப் பாதைக்குத் திரும்பியுள்ளார் விக்ரம் பிரபு. இதற்கு முந்தையப் படங்கள் இவருக்கு, கைக் கொடுக்காத நிலையில், இந்தத் திரைப்படம் நிச்சயமாக, நல்ல திருப்புமுனையைக் கொடுக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

தன் அண்ணனைக் கொல்ல முயற்சித்தவர்களை கொன்று, சிறைக்குச் செல்லும் சரத்குமார். மகள் மற்றும் மகனைக் காப்பாற்ற சென்னைக்குச் சென்று, பிரிண்டிங் பிரசில் வேலை செய்து வளர்க்கின்றார். இரண்டு குழந்தைகளும் வளர்கின்றனர். விக்ரம் பிரபு வாழை வியாபாரம் செய்ய, மகள் ஐஸ்வர்யாவோ வழக்கறிஞருக்குப் படிக்கின்றார். 16வருடங்களுக்குப் பிறகு, சிறையில் இருந்து வெளியே வருகின்றார் சரத்.

சரத்குமார் யாரைக் கொன்றாரோ, அவருடைய மகனான நந்தா சரத்தை பழிவாங்க நினைக்கின்றார். சரத்குமாரினை, அவருடைய பிள்ளைகள் ஏற்க மறுக்கின்றனர். இந்நிலையில், நந்தா பழி வாங்கினாரா, சரத்குமார் தன்னுடைய குடும்பத்தாருடன் இணைந்தாரா என்பது தான், படத்தின் மீதிக் கதை. இப்படி ஒரு படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததற்கே, விக்ரம் பிரபு கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட வாய்ப்பினை, சரியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

இப்படத்தின் மிகப் பெரிய பலமாக இருப்பவை நடிகர்களும், திரைக்கதையுமே. சிறிய பலவீனம் என்றால், அது இப்படத்தின் பாடல்கள் தான். ஒருவேளை, படத்தின் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகி இருந்தால், கண்டிப்பாக இத்திரைப்படம் மக்களை மிக எளிதாக ரீச்சாகி இருக்கும்.

மொத்தத்தில் வானம் கொட்டட்டும்-வசூலினை அள்ளட்டும்.

ரேட்டிங் 3.5/5

HOT NEWS