ஈராக் இராணுவ தளபதி கொல்லப்பட்டார்! அமெரிக்க பொறுப்பேற்றது!

03 January 2020 அரசியல்
drone.jpg

ஈராக்கின் பாக்தாத் நகரில், அமெரிக்க நடத்திய வான்வெளி தாக்குதலில் ஈராக் படைத்தளபதி குவாஷிம் சொலைமனி கொல்லப்பட்டார். இதற்கு அமெரிக்கா அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டது.

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகமானது தாக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்காவில் இருந்து சுமார் 4,000 அமெரிக்க வீரர்கள் தற்பொழுது ஈராக் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். அமெரிக்கத் தூதரகம் தாக்கப்பட்டதை அடுத்து, அமெரிக்க அரசாங்கம் ட்ரோன் மூலம் பாக்தாத் எல்லைப் பகுதியில் தாக்குதல் நடத்தியது. அதில், ஈராக் நாட்டின் முக்கியத் தலைவராகப் பார்க்கப்படும் குவாஷிம் சொலைமனி கொல்லப்பட்டார். இதனை, அமெரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஈராக் நாட்டின் மத்தியக் கிழக்குப் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில், ஈரான் எலைட் குவாட் படையின் தலைவரான, 62 வயதுடைய குவாஷிம் சொலைமனி கொல்லப்பட்டார். பாக்தாத் நகரில் உள்ள விமானநிலையப் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதற்கு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பே உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கர்களைத் தாக்கியதற்காக இந்தத் தாக்குதல் நடதப்பட்டதாகவும், இது தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

HOT NEWS