யூஎஸ் ஓபன் டென்னிஸ்! ரபேல் நடால் சாம்பியன்!

09 September 2019 விளையாட்டு
nadal.jpg

33 வயதாகும் ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால், ரஷ்யாவின் டனில் மெட்விடேவை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றார்.

சுமார் நான்கு மணி நேரம் 51 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில், முதல் இரண்டு செட்களை எளிதாக வென்றார் நடால். ஆனால், அடுத்த இரண்டு செட்களையும் வெறித்தனமாக விளையாட மெட்விடேவ், மூன்றாவது மற்றும் நான்காவது செட்களை வென்றார். இந்நிலையில், யார் வெல்வார் என்ற ஐந்தாவது செட் நடக்க ஆரம்பித்தது.

இதில், நடால் தன்னுடைய விஸ்வரூபத்தைக் காட்டினார். ஒரு கட்டத்தில் மெட்விடேவ் வேறு வழியில்லாமல் விளையாடும் கட்டத்திற்குத் தள்ளப்பட்டார். கடைசியில், ரபேல் நடால், 7-5, 6-3, 5-7, 4-6 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் வென்று யுஎஸ் ஓபன் டென்னிஸ் சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இது நடால் வெல்லும் 19வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும். நான்காவது முறையாக யுஎஸ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார் நடால். இதுவரை ரோஜர் பெடரர் மட்டுமே 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். இன்னும் ஒரு கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றால், பெடரரின் சாதனை சமன் செய்யப்பட்டுவிடும். இதனை அந்த மைதானத்தில் குழுமியிருந்த 25,000 பேரின் முன்னிலையில் கொண்டாடி மகிழ்ந்தார்.

HOT NEWS