உத்திரப் பிரதேசத்தில் 8ம் வகுப்பு வரை தேர்வு கிடையாது! அனைவரும் பாஸ்!

18 March 2020 அரசியல்
upcm.jpg

இந்தியா முழுவதும் தற்பொழுது கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த வைரஸ் காரணமாக, வெளிநாடுகளில் இருந்து இந்தியா வருபவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.

ஒரு சில நாடுகளில் இருந்து பயணிகள் வரத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. சீனாவிற்கு விமானங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இந்தியாவில் மஹாராஷ்டிரா மற்றும் உத்திரப் பிரதேச மாநிலங்களில் தான், இந்த கோவிட்-19 வைரஸானது அதிகமாகப் பரவி உள்ளது. அதனைத் தொடர்ந்து, கேரள மாநிலம் உள்ளது.

இதனால், இந்த மாநிலங்களில் பொதுவிடுமுறை உள்ளிட்ட பல விஷயங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தற்சமயம், பொதுத்தேர்வுகள் நடைபெற்று வருவதால், அந்தத் தேர்வினை எழுதும் மாணவர்களைத் தவிர, எட்டாம் வகுப்பு வரை படிக்கின்ற மாணவ, மாணவிகளுக்கு, விடுமுறை அறிவித்துள்ளது உத்திரப்பிரதேச அரசு. அத்துடன், பொதுமக்கள் தேவையில்லாமல், வெளியில் நடமாடவும் கூடாது எனக் கூறியுள்ளது.

இந்நிலையில், எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுகள் அனைவருமே, தேர்வு எழுதாமலேயே தேர்ச்சி எனவும் அறிவித்துள்ளது. அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். எட்டாம் வகுப்பு வரை, எவ்வித இறுதித் தேர்வும் நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், மாணவ மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HOT NEWS