pic credit:twitter.com/crpfindia
ஜம்மூ-காஷ்மீர் பகுதியில், இந்திய இராணுவத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஜம்மூ-காஷ்மீர் மாநிலத்தின், சோபியா மாவட்டத்தில் உள்ள கவாஜபோரா ரேபான் என்ற இடத்தில், தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக, அப்பகுதி மக்கள் இராணுவத்திற்கு இரகசியமாக தகவல் அளித்துள்ளனர். அந்தத் தகவலின் அடிப்படையில், அப்பகுதியினை இந்திய பாதுகாப்புப் படையினர், இரகசியமாகக் கண்காணித்து வந்தனர்.
அங்கு, தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு அதிரடியாக நுழைந்த இராணுவத்தினர், தீவிரவாதிகள் மீது, சராமாரியாக சுட்டனர். அதில், இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில், இந்திய இராணுவத்திற்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. தொடர்ந்து, அப்பகுதியில் பதுங்கியிருக்கும் பிற தீவிரவாதிகளை, தற்பொழுது தேடி வருகின்றனர்.