டாப் 10 இளையராஜா பாடல்கள்!

09 April 2020 சினிமா
illayarajabday.jpg

சுமார் 1000 படங்களுக்கும் மேல், இசையமைத்துள்ள இசைஞானி இளையராஜாவுக்கு இன்று பிறந்த நாள். அவர் 1000 படங்களில் சுமார் 5000 பாடல்களுக்கு மேல் இசையமைத்துள்ளார். சூப்பர் ஸ்டார் முதல் அல்டிமேட் ஸ்டார் வரை அனைவருக்கும் இவர் இசையமைத்துள்ளார். அப்படி அவர், இசையமைத்துள்ள பாடல்களில் அனைவருக்கும் விருப்பமான பத்து பாடல்களைப் பற்றிப் பார்ப்போம்.

கண்மணி அன்போடு-குணா!

கண்மணி அன்போடு காதலன் நான் எழுதும் கடிதேம! இந்தப் பாடலைக் கேட்காதவரும் இல்லை. பாடாதவரும் இல்லை. சன் சிங்கர், சூப்பர் சிங்கர் என அனைத்து நிகழ்ச்சிகளும் போட்டியாளர்கள் இப்பாடலை பாடாமல் இருப்பதில்லை. அந்த அளவிற்கு அனைவரது வாழ்விலும் இரண்டறக் கலந்தது இப்பாடல். குணா படத்தின் உயிராக இப்பாடலை சொல்லலாம்.

பொதுவாக எம்மனசு தங்கம்-முரட்டு காளை!

முரட்டுக் காளை படத்தின், பொதுவாக எம்மனசு தங்கம் என்ற பாடல் அனைத்து இளசுகளையும் எழுந்து ஆட வைக்கும் பாடல் எனக் கூறலாம். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மார்க்கெட்டை அடுத்த கட்டத்திற்கு கொண்ட சென்ற படம் என்றால், அதுமிகையில்லை. பொதுவாக எம்மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம் இத கேட்காத ரஜனி ரசிகர்கள் கிடையாது.

இளங்காத்து வீசுதே-பிதாமகன்!

இயக்குநர் பாலாவின் ஆஸ்தான இசையமைப்பாளராக, இன்று வரை இசைஞானியே இருந்து வருகிறார். அந்த அளவிற்கு பாலா ராஜா இசைக்கு ரசிகன். அப்படி அவர்கள் இருவரின், உழைப்பிலும் உருவான பிதாமகன் படத்தில் வரும் இளங்காத்து வீசுதே! என்ற பாடலை இரவில் கேட்டால், எப்படிப் பட்ட மனக்கஷ்டம் என்றாலும், கண்ணைக் கட்டிவிடும்.

என் இனிய பொன் நிலாவே-மூடு பனி!

இன்று வரை, இப்பாடலை ரசிக்காத, கேட்காத, பாடாத காதலர்களும் கிடையாது. இப்பாடல் இல்லையென்றால், அது காதலும் கிடையாது. அந்த அளவிற்கு மிக இதமாக, பாடப்பட்ட பாடல் ஆகும். மூடுபனி படம் வெளி வந்த காலங்களில், கிட்டார் பாடல்களுக்கு பெரிய மார்க்கெட். அப்படிப்பட்ட இந்தப் பாடலை, சூர்யா தன்னுடைய காதலியை கவர் செய்ய, வாரணம் ஆயிரம் படத்தில் படிப்பார். இப்போ ஞாபகம் வருகிறதா?

வளையோசை கலகலவென-சத்யா!

கமல்ஹாசனும், இளையாரஜாவும் சேர்ந்தாலே, அப்படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. சத்யா படத்தில், கமல்ஹாசனும், நடிகை அமலாவும் நடித்திருந்த அந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். அப்படத்தில் வரும் வளையோசை கலகலகலவென என்ற பாடல் இன்றும் பட்டித் தொட்டி எங்கும் ஒலிப்பது இளையராஜாவின் சாதனை ஆகும்.

ஓம் சிவோஹம்-நான் கடவுள்!

இளையராஜா மற்றும் இயக்குநர் பாலாவின் கூட்டணியில், நான் கடவுள் படம் வெளியானது. ஆன்மீகவாதியான இளையராஜாவுக்கு, சிவன் பாடல் போட்டுத் தாருங்கள் என்றால், விட்டுவிடுவாரா என்ன? அப்படி இசையமைக்கப்பட்ட பாடல் தான், ஓம் சிவோஹம்! என்ற பாடல். சிவ பக்தர்கள் அனைவருக்கும் விருப்பமான ஒரு பாடல் எனக் கூறலாம்.

கண்ணே கலைமானே-மூன்றாம் பிறை!

கமல்ஹாசன் நடிப்பில் பிளாக்பஸ்டர் திரைப்படமான, மூன்றாம் பிறை திரைப்படத்தில் இப்பாடல் வரும். ஜேசுதாஸின் இசையில், மென்மையாகவும், அதே சமயம் வலியுடனும் இருக்கும் இப்பாடலைக் கேட்டால், உருகாத மனம் மனமே இல்லை எனக் கூறலாம். அந்த அளவிற்கு இப்பாடல் மிக அருமையாக தந்துள்ளார் நம் இசைஞானி.

ராக்கம்மா கையத்தட்டு-தளபதி!

சிம்பொனி இசையானது ஹாலிவுட்டில் மட்டுமே, பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தமிழில் முதன் முதலாக இளையராஜா சிம்பொனி இசையில் தளபதி படத்திற்கு பாடல்களை உருவாக்கினார். அதில் உருவான பாடல் தான், ராக்கம்மா கையத்தட்டு, இப்பாடலுக்கு, ரஜினிகாந்த் ஒரு ஆட்டம் ஆடியிருப்பார். இப்பாடல் அவருக்காகவே, உருவாக்கியது போல கனக்கச்சிதமாக உருவாக்கியிருப்பார் ராஜா.

நினைவோ ஒரு பறவை-சிவப்பு ரோஜாக்கள்!

ரஜினி ஒரு மேடையில், கூறும் பொழுது, என்னை விட, கமலுக்குத் தான் அதிக நல்லப் பாடல்களை ராஜா கொடுத்துள்ளார் எனக் கூறினார். அதுவும் ஒரு விதத்தில் உண்மை தான். சிவப்பு ரோஜாக்கள் படத்தைப் பார்க்கதவர்கள் இல்லையெனக் கூறலாம். அந்த அளவிற்கு அப்படம் மெகா ஹிட்டான திரைப்படம். அப்படத்தில் வரும் நினைவோ ஒரு பறவை எனும், பாடலும், அதில் வரும் ஹம்மிங்கும், சேச்ச! சான்ஸே இல்ல!

அப்படிப்பட்ட அந்த இசை மேதைக்கு நம் தமிழன் நியூஸ் சார்பாகவும், நம் வாசகர்கள் சார்பாகவும் இனியப் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

HOT NEWS