காவல்துறை பணியாளர் தேர்விலும் மோசடி! 1000 பேருடன் தொடர்பு?

18 March 2020 அரசியல்
tnusrb.jpg

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 மற்றும் குரூப் 2 தேர்வுகளில் முறைகேடு நடைபெற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், தமிழகக் காவல்துறையானது, காலியாக உள்ளப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பெயரினை வெளியிட்டுள்ளது.

கடந்த முறை நடைபெற்ற கிரேட்-2 போலீஸ் காண்ஸ்டபிள் மற்றும் கிரேட்-2 ஜெயில் வார்டன் பணிகளுக்காகத் தேர்வுகள் நடைபெற்றன. சுமார் 8,888 பணியிடங்களுக்காக நடைபெற்றத் தேர்வில், தமிழகம் முழுவதும் சுமார் 32 மாவட்டங்களில் இருந்து 3.25 லட்சம் பேர் தேர்வு எழுதினர். இந்தத் தேர்வு முடிந்ததும், அதன் முடிவுகள் வெளியிடப்பட்டன.

அதில், 15 மையங்களில் இருந்து சுமார், 47,000 பேர் முதல்கட்ட எழுத்துத் தேர்வில் வெற்றிப் பெற்றதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற உடற்தகுதி தேர்வுகளிலும் சேர்த்து, மொத்தமாக 8,800 பேரினை சான்றிதழ்கள் பரிசோதனைக்கு அழைத்தனர். இதில், குறைந்தது 10% நபர்களுக்கு, விளையாட்டுப் பிரிவின் அடிப்படையில், அழைக்கப்பட்டு இருந்தனர்.

அவர்களில் பலரும் தகுதியற்ற சான்றிதழ்கள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. Sports Development Authority of Tamil Nadu (SDAT) அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களுக்கே முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகின்றது. அந்த அமைப்பின் அங்கீகாரமில்லாத சான்றிதழ்களை 800க்கும் அதிகமானோர் கொண்டு வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

மொத்தமாக 1000 நபர்களில், 800க்கும் அதிகமானோர் தகுதியற்ற சான்றிதழ்களை கொண்டு வந்து இருந்ததால், அவர்களிடம் விளக்கம் கேட்டு ஈமெயில் அனுப்பியும் உள்ளனர். தற்பொழுது, தகுதியான 8,773 பேரின் பெயரினையும், அவர்களுடையத் தேர்வு எண்களையும் வெளியிட்டுள்ளது டிஎன்யூஎஸ்ஆர்பி (TNUSRB) நிர்வாகம்.

HOT NEWS