இயற்கை முறையில் எளிதாக கருத்தரிக்க என்ன செய்ய வேண்டும்?

03 February 2020 உடல்நலம்
pregnancy.jpg

குழந்தைப் பெற்றுக் கொள்வது, அனைத்து திருமணமான தம்பதிகளின் ஆசையாகவும், கடமையாகவும் உள்ளது. திருமணமாகி சிறிது காலத்தில் கர்ப்பம் தரிக்கவில்லை என்றால், ஊராரின் பேச்சிற்கும், ஏளனத்திற்கும் ஆளாக வேண்டி உள்ளது. இதற்குப் பல காரணங்கள் கூறப்பட்டாலும், இயற்கையான கருத்தரிப்பிற்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். விரைவாகவும், எளிதாகவும், எவ்விதப் பாதிப்புமின்றி இயற்கையாகவும் கருத்தரிக்க இயலும்.

உடலுறவு

சரியான நேரத்தில் உடலுறவு கொள்வதன் மூலம், எளிதாக கர்ப்பம் தரிக்க இயலும். நல்ல உறக்கம், நல்ல உணவுப் பழக்கம், உடற்பயிற்சி முதலானவை அனைவருக்கும் அவசியமான ஒன்றாகும். உடலில் உஷ்ணம் சம்பந்தப்பட்டப் பிரச்சனைகள் இருந்தால், ஒரு நாளைக்கு இரண்டு முறைக் குளிப்பது நல்லது. அதே போல், இளநீர், முள்ளங்கி உணவு, போன்ற நீர் ஆகாரங்களை எடுத்துக் கொள்வதும் நல்லது.

மாதவிடாய் முடிந்த அடுத்த நான்கு நாட்களும், கருமுட்டையானது, மிக வலிமையாகவும், புதியதாகவும் இருக்கும். அவ்வாறு இருக்கும் சமயத்தில், உடலுறவு கொள்வது உடனடியாக கர்ப்பம் தரிக்க உதவும்.

உணவுகளைத் தவிர்த்தல்

கர்ப்பம் தரித்தப் பின் மட்டுமல்ல, கர்ப்பம் தரிப்பதற்கு முன்னும், பப்பாளி முதலான, உஷ்ணத்தை கிளப்பும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். நல்ல நார்சத்து உள்ள உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. மேலும், இரும்புச் சத்து நிறைந்த, பேரிட்சை முதலான உணவுகளை எடுத்துக் கொண்டால், கரு முட்டையும் வலுவடையும். அதே சமயம், விந்தணுவும், கருமுட்டையில் எளிதாக சென்று தங்கும்.

நீர்

முடிந்த அளவிற்கு நீர் அருந்துதல், ஆண் மற்றும் பெண் ஆகிய இருவருக்கும் நல்லது. அவ்வாறு அருந்துவதன் மூலம், உடலில் உள்ள செல்கள் புத்துணர்ச்சியாக செயல்படும். ஒரு சிலர், நீரினை அதிகமாக எடுத்துக் கொண்டால், அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி இருக்கும் என, தவறாக கருதுகின்றனர். சிறுநீர் கழிக்கும் பொழுது, உடலில் உள்ள தேவையற்ற உஷ்ணமானது, சிறுநீர் மூலமாக வெளியேறி விடும்.

சூரிய ஒளி

இது இல்லாமல், கர்ப்பம் தரிப்பது மிக கஷ்டமான ஒன்று தான். அதிகாலையில், சூரிய ஒளியில் நடைபயிற்சி, யோகா, தியானம் முதலானவைகளைச் செய்யும் பொழுது, உடலிற்குத் தேவையான விட்டமின்-டி ஆனது, தானாக கிடைக்கும். இதனை உணவில் பெரிய அளவில் பெற இயலாது. எனவே, ஆண் பெண் பாகுபாடு இல்லாமல், சூரிய ஒளியில் இருப்பது நல்லது.

இவைகளைச் செய்தாலே போதும். இயற்கையான முறையில், எளிதாகவும், செலவுகள் இல்லாமலும் குழந்தைப் பாக்கியத்தினை அடையலாம்.

HOT NEWS