தோழர் வெங்கடேசன்! திரைவிமர்சனம்!

12 July 2019 சினிமா
thve.jpg

அரசுப் பேருந்துகளால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி, இதுவரை யாரும் எந்தப் படத்திலும் பெரிய அளவில் சொன்னதில்லை. அந்தக் குறையை, தோழர் வெங்கடேசன் போக்கியிருக்கிறார்.

காஞ்சிபுரம் பக்கத்தில் உள்ள, ஒரு சிறிய கிராமம். அதில் சோடா கம்பெனி வைத்திருக்கிறார் நம்ம தோழர். மிக நல்ல மனிதர். ஒரு நாள் அவர் தினமும் சாப்பிடும், தள்ளிவண்டிக் கடைக்காரர் ஷர்மிளா இறந்துவிடுகிறார். இதனால், அவருடைய மகள், நடுத்தெருவிற்கு வருகிறார். கதாநாயகனால், தாங்கிக் கொள்ள இயலவில்லை. வீட்டிற்கு அழைத்து வருகிறார். வீட்டிற்கு அழைத்து வரப்படுபவர் தான் படத்தின் நாயகி.

வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருக்கையில், திடீரென்று பஸ் மோதி, தன்னுடைய இரண்டு கைகளையும் இழக்கிறார். இதனால், அவரால் என்ன செய்வதென்று தெரியவில்லை. அவருக்கு ஆறுதலாக, அவருக்கு வேண்டிய அனைத்தையும் செய்து தருகிறார் கதாநாயகி மோனிகா. இருவருக்கும் இடையில் காதலும் மலர்கிறது. இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் மீது வழக்குத் தொடர்கிறார். வழக்கில் இவருக்கு நீதி கிடைத்ததா? இருவரும் ஒன்று சேர்ந்தனரா? என்பது தான் படத்தின் மீதிக் கதை.

பொதுவாக படம் என்றால், சென்னை, திருச்சி, கோவை, மதுரை, சிவகங்கை, தேனி என இந்த மாவட்டங்களை சுற்றியேப் படத்தினை எடுப்பர். காஞ்சிபுரத்தை ஒரு ஊறுகாய் அளவிற்குக் கூட, தமிழகத்தில் பயன்படுத்தியது இல்லை. இந்தப் படத்தில் காஞ்சிபுரம் சுற்றியே எடுத்துள்ளது கொஞ்சம் கண்களுக்குப் பிரஸ்ஸாக உள்ளது. கதையும் புதியது, களமும் புதியது. நடிகர்களும் புதியவர்கள். இந்தப் படத்தை குறைந்தது ஒரு தடவைப் பார்க்கலாம். ஆனால், கடைசிக் காட்சிகளில் வரும் சில விஷயங்கள் நம்மைக் கண் கலங்க வைக்கிறது.

ரேட்டிங் 2.3/5

HOT NEWS