திமுகவில் இனி திருநங்கைகள் இணையலாம்! திமுக அறிவிப்பு!

13 November 2019 அரசியல்
mkstalindmk.jpg

திமுகவில் பல குழுக்கள் மற்றும் அணிகள் உள்ளன. அந்தக் குழுக்களிலும், அணிகளிலும் பல்லாயிரம் பேர் தங்களை உறுப்பினராக இணைத்துக் கொண்டு உள்ளனர்.

திமுக பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன. அதில், திருநங்கைகளை திமுகவில் சேர்ப்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

பின்னர், இனி திமுகவில் திருநங்கைகளை சேர்க்கலாம் என்ற தீர்மானம் நிறைவேறியது. இதனையடுத்து, திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு நன்றித் தெரிவிக்கும் வகையில், சென்னையின் பல்வேறுப் பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகள் முக ஸ்டாலினை சந்தித்து, அவருக்கு நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

HOT NEWS