ஆஷஸ் தொடரில் இருந்து உலக சாம்பியன்ஷிப் ஆரம்பம்!

18 May 2019 விளையாட்டு
icc-championship.jpg

நடக்கும் ஆஷஸ் தொடரில் இருந்து, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் ஆரம்பமாகி உள்ளது. டி20 உலகக்கோப்பை, ஒரு நாள் உலகக் கோப்பையைப் போல, டெஸ்ட் போட்டிக்கும் சாம்பியனஷிப் எனப்படும் முறையை, ஐசிசி நிர்வாகம் அறிமுகப்படுத்தி உள்ளது.

அதன்படி, உலகளவில் முதல் ஒன்பது இடங்களில் உள்ள அணிகள், டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றுள்ளன. அதில், ஒவ்வொரு அணியும் சொந்த மண்ணில் மூன்று போட்டிகளும், அயல்நாட்டில் மூன்று போட்டிகளும் விளையாட வேண்டும். இந்தத் தொடர் இரண்டு ஆண்டுகள் நடைபெற உள்ளது. மொத்தம் 72 டெஸ்ட் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இந்தத் தொடர், ஆஷஸ் தொடரில் இருந்து ஆரம்பமாகி உள்ளது.

இந்தத் தொடர் 2021ம் ஆண்டு நிறைவுபெறுகிறது. அதிகப் புள்ளிகளைப் பெறும் அணிக்கு டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு கேடயம் வழங்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

HOT NEWS