வென்று காட்டிய மூக்குத்தி முருகன்! ரஜினியின் பில்லா பாடலால் வெற்றி!

11 November 2019 சினிமா
supersinger7.jpg

கடந்த ஏப்ரல் 27ம் தேதி அன்று, தமிழ்நாட்டின் மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சியான, விஜய் டிவியின் சூப்பர் சிங்கர்7 தொடங்கியது. பலப் போட்டியாளர்கள் இதில் கலந்து கொண்டு, தங்களுடைய இசைத் திறமையை வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்ச்சியினை, மா கா பா ஆனந்த் மற்றும் ப்ரியங்கா தேஷ்பாண்டே ஆகியோர் தொகுத்து வழங்கினர். பரபரப்பாக சென்ற இந்த நிகழ்ச்சிக்கு பென்னி தயால், உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் நடுவர்களாக செயல்பட்டனர். இந்தப் போட்டியின் இறுதிச் சுற்றானது, நேற்று கோவையில் மிகப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இதற்கு, சிறப்பு விருந்தினராக, தமிழ் சினிமாவின் ராக் ஸ்டார் என்றப் பெயர் பெற்ற அனிருத் கலந்து கொண்டார். கடைசி சுற்றிற்கு, கௌதம், சாம் விஷால், புன்னியா, விக்ரம் மற்றும் மூக்குத்தி முருகன் ஆகியோர் தகுதி பெற்றிருந்தனர்.

அவர்கள் தங்களுடையப் பாடல்களைப் பாடி அசத்தினர். கௌதம் ஒரு படி மேலாக சென்று டிரம்ஸ் வாசித்து அசத்தினார். இதில், மூன்றாம் பரிசானது புன்னியா மற்றும் சாம் விஷாலுக்கு வழங்கப்பட்டது. அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் விதமாக, தன்னுடைய இசையில் பாடும் வாய்ப்பினை அனிருத் வழங்கினார். இரண்டாம் பரிசாக சுமார் 25 லட்சம் மதிப்புள்ள வைர நகைகளை விக்ரம் வென்றார்.

பரபரப்பாக சென்ற இந்த போட்டியில், முதல் பரிசினை மூக்குத்தி முருகன் வென்றார். அவருக்கு 50 லட்சம் மதிப்புள்ள வீடும், அனிருத் இசையில் பாடும் வாய்ப்பும் வழங்கப்பட உள்ளது.

HOT NEWS