3வது டெஸ்ட்டில் ஸ்மித் இல்லை!

21 August 2019 விளையாட்டு
ashes-smith.jpg

ஆஷஸ் தொடரில் நடைபெற உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியின் பொழுது, 80 ரன்கள் அடித்திருந்த நிலையில், ஜோஃப்ரா ஆர்ச்சர் வீசிய பந்தில், பலத்த காயம் அடைந்தார் ஸ்மித். இதனைத் தொடர்ந்து, ரிட்டயர்டு ஹர்ட் முறையில், ஆட்டத்தை விட்டுப் பாதியிலேயே வெளியேறினார்.

இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் இருந்தார். அவர்கள் இவருக்கு தலையில் ஏற்பட்ட காயம் இன்னும் குணமாகவில்லை எனக் கூறியதைத் தொடர்ந்து, இவர் ஹெட்டிங்லீயில் நடைபெற உள்ள ஆஷஸ் தொடரின் மூன்றாவது போட்டியில், விளையாடமாட்டர் என அந்த அணி கூறியுள்ளது.

இருப்பினும், அவர் ஆஸ்திரேலிய அணியுடன் வலைப் பயிற்சியின் பொழுது, ஆஸ்திரேலிய வீரர் உஸ்மன் கவஜாவிற்கு ஆலோசனை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS