தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்!

09 December 2019 விளையாட்டு
sag2019.jpg

13வது தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் தற்பொழுது, நேபாளத்தில் நடைபெற்று வருகின்றன. இதில், இந்தியா உட்பட ஏழு நாடுகள் பங்கு பெற்றுள்ளன.

இதில் இந்திய அணி வீரர்கள் ஆரம்ப நாள் முதலே, பதக்க வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணி 132 தங்கம், 79 வெள்ளி, 41 வெண்கலம் உட்பட 252 பதக்கங்களை வென்று முதலிடத்தில் உள்ளது. இந்திய அணியினைத் தொடர்ந்து, நேபாளம் 45 தங்கம், 44 வெள்ளி மற்றும் 76 வெணகலத்துடன் மொத்தமாக 165 பதக்கங்களை வென்று, பதக்கப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

197 பதக்கங்களுடன் இலங்கை மூன்றாவது இடத்திலும், 110 பதக்கங்களுடன் பாகிஸ்தான் நான்காம் இடத்திலும், 102 பதக்கங்களுடன் வங்கதேசம் ஐந்தாம் இடத்திலும், 3 பதக்கங்களுடன் மாலத்தீவுகள் அணி ஐறாம் இடத்திலும் உள்ளன. 9 வெண்கலப் பதக்கங்களை வென்று, பூட்டான் அணி கடைசி இடத்தினைப் பிடித்துள்ளது.

HOT NEWS