ஸ்மிருதி மந்தானாவுக்கு காயம்! போட்டியில் பங்கேற்கமாட்டார்!

09 October 2019 விளையாட்டு
smritimandana.jpg

இன்று முதல், தென் ஆப்பிரிக்கா உடனான மூன்று ஒரு நாள் போட்டியில், இந்தியி பெண்கள் கிரிக்கெட் அணிப் பங்கேற்க உள்ளது.

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள, தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணியானது, இன்று முதல் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது.

வதோதராவில் உள்ள, ரிலையன்ஸ் மைதானத்தில் இந்தப் போட்டியானது, ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீராங்கனையான, ஸ்மிருதி மந்தனா பங்கேற்கமாட்டார் என்ற தகவல், தற்பொழுது வெளியாகி உள்ளது. கால் பாதத்தில் ஏற்பட்ட காயம் காரணமாக, சிகிச்சைப் பெற்று வரும் மந்தனா, கிரிக்கெட் பயிற்சியில் ஈடுபட முடியாத சூழலில் உள்ளார். இதன் காரணமாக, அவரால் தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில், விளையாட முடியாத சூழ்நிலை உருவாகி உள்ளது.

தொடர்ந்து ஓய்வுத் தேவைப்படுவதால், அவர் தற்பொழுது நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில், விளையாடமாட்டர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டி இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Indian Team:Mithali Raj (c), Harmanpreet Kaur, Jemimah Rodrigues, Punam Raut, Priya Punia, D Hemalatha, Deepti Sharma, Shikha Pandey, Pooja Vastrakar, Jhulan Goswami, Tamiya Bhatia, Poonam Yadav, Mansi Joshi, Ekta Bisht, Rajeshwari Gayakwad

South Africa Team:Laura Wolvaardt, Sune Luus (c), Marizanne Kapp, Tazmin Britts, Trisha Chetty, Lizelle Lee, Mignon du Preez, Shabnin Ismail, Ayabonga Khaka, Tumi Sekhukhune, Nonkululeko Mlaba, Nadine de Klerk, Kara Goodall, Nondumiso Shangse

HOT NEWS

S