சிவப்பு மஞ்சள் பச்சை திரைவிமர்சனம்!

09 September 2019 சினிமா
smp.jpg

படத்தின் தலைப்பில் இருந்தே நாம் இந்தப் படம், டிராபிக் போலீஸ், தண்டனைகள், ரேஸ்கள் என இருக்கும் என நம்மால் யூகிக்க முடிகிறது. அப்படி யூகித்துத் தான், படம் பார்க்கப் போகின்றோம். படமும் நம்முடைய எதிர்ப்பார்ப்பை, பூர்த்தி செய்யும் விதத்தில் தான் இந்த சி.ம.ப திரைப்படம் உள்ளது.

மாமன் மச்சான் பிரண்ட்ஷிப்புன்னு, நம்ம சிம்பு ஒரு பாட்டுப் பாடியிருப்பார். அது போல இந்தப் படத்திற்கு ஒரு பாட்டு இருந்திருக்கலாம். ஏன் வீண் செய்தார்கள் என்றுத் தெரியவில்லை. முதலில் படத்தின் மிகப் பெரிய பலவீனமாக இருப்பது, இப்படத்தின் இசை. படத்தில் ஒரு சில பாடல்கள் நன்றாக இருந்திருந்தாலே, படம் நல்ல ரீச்சாகி இருக்கும்.

படத்திற்கு வருவோம். சித்தார்த் ஒரு ஒழுக்கமான போக்குவரத்துக் காவலர். அவர் பணியில் இருக்கும் பொழுது, பைக் ரேஸ் செய்யும் ஜிவிபிரகாஷைக் கையும் களவுமாகப் பிடிக்கிறார். அவரை ரோட்டில் வைத்தும், அவமானம் செய்கின்றார். அதனால், ஜிவிபிரகாஷிற்கு அவர் மேல் கோபம் ஏற்படுகிறது. அடுத்த நாள் ஜிவிக்கும், சித்தார்த்துக்கும் ஒரு அதிர்ச்சிக் காத்திருக்கிறது.

சித்தார்த் திருமணத்திற்காக பெண் பார்க்கச் செல்லும், பெண்ணின் தம்பி தான் ஜிவி. அவ்வளவு தான் ஜிவிக்குப் படுகோபம் வந்துவிடுகிறது. கல்யாணத்திற்கு தன்னால் முடிந்த அனைத்து எதிர்ப்புகளையும், தெரிவிக்கிறார். ஆனால், பிரயோஜனம் இல்லை. சித்தார்த்தைப் பார்த்தவுடன் ஹீரோயினுக்கும், ஹீரோயினைப் பார்த்தவுடன் சித்தார்த்துக்கும் பிடித்துவிடுகிறது. எதிர்ப்புகளை மீறி, திருமணமும் நடக்கிறது.

ஜிவி ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்ள, அதிலிருந்து சித்தார்த் காப்பாற்றுகிறார். ஜிவியும், சித்தார்த்தும் ஒன்று சேர்ந்தார்களா? அக்காவுடன் கோபித்துக் கொள்ளும் ஜிவி பேசினாரா? என்பது தான் கதை.

கேட்க சாதாரணமாக இருக்கலாம். ஆனால், படத்தின் திரைக்கதை நம்மை இருக்கையிலேயே அமர வைக்கிறது. படம் உண்மையில் பாராட்ட வேண்டப்பட வேண்டிய ஒன்று என்று கூறலாம். சித்தார்த், ஜிவி இருவருமே இப்படத்தில் தன்னுடையக் கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

இந்த மாதிரி குடும்பம் சார்ந்தப் படங்கள் வருவது, மிகவும் அரிதான விஷயமாகவிட்டது நம்முடைய தமிழ் சினிமாவில்.

ரேட்டிங் 3.8/5

HOT NEWS