எஸ்ஐ வில்சன் கொலை வழக்கு! என்ஐஏவிற்கு மாற்றப்பட்டது!

03 February 2020 அரசியல்
siwilson1.jpg

கன்னியாகுமரி, களியக்காவிளையில் சோதனையில் ஈடுபட்டிருந்து சிறப்பு ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கானது, தற்பொழுது என்ஐஏ பிரிவிற்கு மாற்றப்பட்டு உள்ளது.

இந்த கொலைக் குற்றத்தில் ஈடுபட்ட தவுபீக் மற்றும் ஷமீம் ஆகியோரை, நீண்டத் தேடுதலுக்குப் பிறகு, போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கி மற்றும் கத்தியானது, கேரளாவில் உள்ள சாக்கடையில் இருந்து மீட்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்தக் கொலை சம்பவத்தினைப் பற்றி, போலீசார் விசாரிக்கையில் பல திடுக்கிடும் விஷயங்கள் வெளி வந்தன. மொத்தம் 15 முதல் 20 பேரினை கொலை செய்ய இவர்களும், இவர்களுடைய நண்பர்களும் திட்டமிட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், இவர்களுடைய நண்பர்களையும் போலீசார் கைது செய்ய உள்ளனர். அதுமட்டுமின்றி, இவர்களுக்கும் ஐஎஸ் உள்ளிட்ட தீவிரவாதக் குழுக்களும் பழக்கம் இருக்கலாம் என, போலீசார் நம்புகின்றனர்.

இதனால், இவர்கள் மீது உபா சட்டம் பாய்ந்தது. தற்பொழுது தவுபிக் மற்றும் ஷமீம் ஆகியோர், உபா சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களுடைய, வழக்கினை இனி தேசியப் புலனாய்வு நிறுவனமான, என்ஐஏ விசாரிக்க உள்ளது. இதன் மூலம், இவர்களுடைய உண்மை முகம் வெளிவர வாய்ப்பிருப்பதாக நம்பப்படுகின்றது.

HOT NEWS