இந்து என்பதால் என்னிடம் பாரபட்சம் பார்த்தனர்! பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஓபன் டாக்!

27 December 2019 விளையாட்டு
danishkaneria.jpg

நான் இந்து மதத்தினைச் சேர்ந்தவன் என்பதால், என்னை பாரபட்சமாகவே என்னுடைய அணியில் நடத்தினர் என, முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டேனியல் கனேரியா தெரிவித்துள்ளார். இது குறித்து, பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயிப் அக்தரும், தன்னுடைய கருத்தினை வெளிப்படுத்தி உள்ளார்.

டேனியல் கனேரியா பற்றி டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அக்தர், கனேரியாவிற்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை. மிகச் சிறந்த பந்துவீச்சாளர் என்றாலும், அவர் இந்து என்பதால் அவரைப் புரக்கணித்தனர். கனேரியா சக வீரர்களுடன் அமர்ந்து, உணவருந்தும் பொழுது அணியின் கேப்டன் அவரை வெறுப்புடன் பார்ப்பார் என்றார்.

இது பற்றிப் பேசிய கனேரியோ, அக்தருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். அவர் கூறியவைகள் அனைத்தும் உண்மையான விஷயங்கள் தான். முன்னாள் வீரர்கள் இன்ஸமாம்-உல்-ஹக், முகம்மத் யூசப் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தன்னிடம் கண்ணியத்துடன் நடந்து கொண்டனர் என்றார். மேலும், தன்னை அவமதித்த வீரர்களின் பெயரினை விரைவில் வெளியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

HOT NEWS