ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக வாட்சன் தேர்வு!

13 November 2019 விளையாட்டு
shanewatson2.jpg

ஆஸ்திரேலியா கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன் நியமிக்கப்பட்டார்.

இது குறித்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து பதிவிட்டுள்ள வாட்சன், நான் ஏசிஏயின் தலைவராக நியமிக்கப்பட்டதற்கு மிகவும் பெருமை அடைகின்றேன். எதிர்காலத்திற்காக நான் கண்டிப்பாக உழைப்பேன். நான் பெரிய பொறுப்பில் இருக்கின்றேன். இதானல், கிரிக்கெட் மீது எனக்கு இன்னும் ஆர்வம் அதிகரித்து உள்ளது. தொடர்ந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் வளர முயற்சிப்பேன் எனக் கூறியுள்ளார்.

மேலும் அவர், இந்தக் கிரிக்கெட் விளையாட்டினை சுவாரஸ்யமாக்கும் விஷயங்களைப் பற்றியும் செயல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். பெண்கள் கிரிக்கெட்டானது விளையாட்டாக மட்டுமின்றி, அவர்களுடைய குடும்பத்திற்கும் பெரிதும் உதவும் வகையில், மாற்றங்கள் கொண்டு வரப்படும் எனவும் கூறியுள்ளார்.

வாட்சனுடன் சேர்ந்து, மொத்தம் பத்து பேர் கொண்ட குழுவாக ஏசிஏ செயல்பட்டு வருகின்றது. இதில், ஆரோன் பின்ச், அலிசா ஹெலே, மோய்ஸஸ் ஹென்ரிக்கஸ், நீல் மேக்ஸ்வெல், ஜேனட் டோர்னே, கிரக் டையர், பாட் கும்மின்ஸ், கிரிஸ்டியன் பீம்ஸ் மற்றும் லிசா ஸ்தாலேகர் ஆகியோர் அந்தக் குழுவில் உள்ளனர்.

HOT NEWS