ஷகிப் அல் ஹசனுக்கு இரண்டு ஆண்டுகள் தடை! ஐசிசி அதிரடி! எதற்குன்னுத் தெரியுமா?

31 October 2019 விளையாட்டு
shakibalhasanban.jpg

ஷகிப் அல் ஹசன் சர்வதேசப் போட்டிகளில், இரண்டு ஆண்டுகள் விளையாட ஐசிசி தடை விதித்துள்ளது. இதனை தாம் ஏற்றுக் கொள்வதாக, ஷகிப் அல் ஹசன் கூறியுள்ளார்.

புக்கிகளுடன் தொடர்பு மற்றும் புக்கிங்கில் ஈடுபட்டதாக, ஷகிப் அல் ஹசன் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதனையடுத்து, அவர் ஐசிசி நிர்வாக விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. அவரிடம் தொடர்ந்து, விசாரணையும் நடத்தப்பட்டன. அதில், அவரிடம் தான் நிரபராதி என நிரூபிக்க எவ்வித ஆதாரமும் இல்லாததால், அவரிடம் விளக்கம் கேட்டு இருந்தது.

இருப்பினும், தன்னுடைய நிலைப்பாட்டினை நிரூபிக்கத் தவறியதால், அவர் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர் இந்தியா வங்கதேசம் மோதும் போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதனிடையே, கிரிக்கெட் பயிற்சி பெரும் மாணவர்களுக்கு, அறிவுரை வழங்க இருக்கிறார் ஷகிப். அருடையப் பிரச்சனைப் பற்றி வருத்தம் தெரிவித்துள்ள வங்கதேச கிரிக்கெட் வாரியம், ஷகிப் அல் ஹசன் மிகவும் அனுபவம் வாய்ந்த கிரிக்கெட் வீரர். அவருக்கு இப்படி ஒரு பிரச்சனை வந்துள்ளது தர்ம சங்கடத்தினை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும், அவருக்கு நாம் துணை நிற்போம். அவர் மீண்டும் வங்கதேச கிரிக்கெட் அணிக்காக விளையாடுவார் என, நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

HOT NEWS