சஹோ திரைவிமர்சனம்!

31 August 2019 சினிமா
saaho.jpg

ரேட்டிங் 2.5/5

சாதாரண கேங்ஸ்டர் கதை. கேங்ஸ்டர் கூட்டத் தலைவன் இறந்துவிடுகிறான், அவனுடையப் பிள்ளை அந்த இடத்திற்கு வருகிறான். அப்பாவின் லாக்கரைத் திறக்க முயல்கிறான். அவர்களை எப்படி நாயகன் பிரபாஸ் தடுக்கிறார். பிரபாஸ் ஏன் தடுக்க வேண்டும் என்பது தான், சஹோ படத்தின் கதை.

யப்பா! இது ஆதி காலத்துக் கதையாச்சேன்னு, உங்களுக்குத் தோணலாம். ஆனால், அது தான் உண்மை. கொஞ்சம் ஆட்களை மாற்றி, இடத்தை மாற்றி, தொழில்நுட்பங்களை மாற்றி இப்படத்தை எடுத்துள்ளனர். படத்தின் மிக்பெரிய பலமே இரண்டு விஷயம் தான்.

ஒன்று ஒளிப்பதிவு மற்றொன்று சண்டைக் காட்சிகள். ஒவ்வொரு விநாடியும் நம்மை ரசிக்க வைக்கிறார் ஒளிப்பதிவாளர் மதி. படத்தில் வரும் அதிரடி சண்டைக் காட்சிகள் அனைத்துமே அற்புதமாகத் தான் உள்ளன. சும்மா குறைக்கூற வேண்டும் எனக் கூறினால், இரவில் கனவில் பிரபாஸ் வந்து கண்ணைக் குத்துவார்.

படத்தில் அனைத்தும் உள்ளன. ஆனால், நல்லத் திரைக்கதையும், பலமானக் கதையும் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. எவ்வளவுப் புகழ் பெற்ற கலைஞர்கள் ஒன்று சேர்ந்து உருவாக்கினாலும், கதை வலுவாக இல்லையென்றால் படம் என்னவாகும் என்பதற்கு இந்த சஹோ திரைப்படம் ஒரு உதாரணமாக இருக்கும் எனக் கூறினால் அது மிகையாகாது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களாக கஷ்டப்பட்டு எடுக்கப்பட்டத் திரைப்படத்திற்கு இப்படியொரு நிலைமை வந்திருக்க வேண்டாம். பாகுபலி நாயகன் படத்தின் பட்ஜெட்டை நம்பிக் களமிறங்கி விட்டார், உண்மையில் பட்ஜெட்டிற்கு ஏற்றக் கதை இருந்திருந்தால், இத்திரைப்படம் ஹாலிவுட் படமே.

வில்லனின் மகனாக நடித்திருக்கும் அருண் விஜய், உண்மையில் நல்லக் கதாப்பாத்திரத்தைத் தேர்வு செய்துள்ளார். அந்த அளவிற்கு கதைக்கு முக்கியமானக் கதாப்பாத்திரம். மற்றக் கலைஞர்களும் நன்றாகவே தன்னுடையப் பங்கை அளித்துள்ளனர். ஆனால், படத்தில் ஒரு லாஜிக்கிம் இருக்காது. ஆதலால், நீங்கள் இந்தப் படத்தினை சூப்பர் ஹீரோ படம் என கூறிக் கொள்ளலாம். ஏனெனில், பிரபாஸ் பறக்கிறார், தாவுகிறார், ஓடுகிறார், ஏன் ஆயிரம் பேர் சுட்டாலும், அவர் மீது ஒரு குண்டும் படாது அந்த அளவிற்கு அவர் ஹீரோயிசம் செய்கிறார். படத்தின் நாயகி ஸ்ரத்தா கபூர், தன்னுடையக் கதாப்பாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளார் எனக் கூறலாம்.

ஓவர் பில்டப் மற்றும் ஓவர் ஹீரோயிசமும் நம்மை எரிச்சலடையச் செய்கின்றன. படத்தின் பாடல்கள் அருமை. அதே சமயம் படத்திற்கு எவ்வித மாதிரியான பின்னணி இசைத் தேவையோ, அதனை அற்புதமாக அளித்துள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

மொத்தத்தில் சஹோ- ஓஹோன்னு வர வேண்டியப் படம், ஊஹுன்னு வந்திருக்கு.

HOT NEWS