600வது கோல் அடித்து, அசத்திய ரொனால்டோ!

28 April 2019 விளையாட்டு
pakistan1.jpg

உலகளவில், கால்பந்து ரசிகர்களால் கடவுளாகப் பார்க்கப்படும், கிரிஸ்டியனா ரொனால்டோ தன்னுடைய 600 கிளப் கோலை அடித்து அசத்தியுள்ளார்.

தன்னுடைய கால்பந்து ஆட்டத்தை சிறிய கிளப்பில் ஆரம்பித்து இருந்தாலும், தன்னுடைய திறமையால், மேன்செஸ்டர் யுனைடெட் அணிக்கு, அந்த அணியின் பயிற்சியாளராக இருந்த, சர். அலெக்ஸ் பெர்குசன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர், ரொனால்டோவின் கேரியரில், வளர்ச்சி என்ற வார்த்தை மட்டுமே உள்ளது.

2009ம் ஆண்டு ஸ்பெயினின் லாலிகா போட்டியில் விளையாடுவதற்காக, ரியல் மேட்ரிட் அணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்பொழுது, அதிக தொகைக்கு இவரை, ரியல் மேட்ரிட் வாங்கியது. பின்னர், அந்த அணிக்காக, பல நூறு சாதனைகளை செய்து முடித்தார். சென்ற ஆண்டு, ரியல் மேட்ரிட் அணியில் இருந்து, இத்தாலியில் உள்ள, யுவென்சட்ஸ் அணிக்கு, பெரிய தொகைக்கு மாறினார். அங்கும், அவரின் கை ஓங்கியே உள்ளது என்று தான் கூற வேண்டும்.

ரசிகர்களும், ரொனால்டோவினை ஏற்றுக் கொண்டுவிட்டனர். தொடர்ந்து கோல் மழைப் பொலிந்து வரும் ரொனால்டோ, இந்த ஆண்டு யுவென்சட்ஸ் அணிக்காக, 27 கோல்களை அடித்து அசத்தியுள்ளார். இது இத்தாலியில் இவர் விளையாடும் முதல் ஆண்டு என்பதால், முதலில் தடுமாறிய ரொனால்டோ பின்னர், சமாளித்து மீண்டும் பழைய பார்மிற்கு வந்தார்.

34 வயதான கிரிஸ்டியான ரொனால்டோ, இதுவரை ரியல் மேட்ரிட் அணிக்காக, 450 கோல்களும், மென்செஸ்டர் யுனைடெட் அணிக்காக 118 கோல்களும், யுவென்சட்ஸ் அணிக்காக 27 கோல்களும் அடித்துள்ளார்.

இவரின் சகப்போட்டியாளரான பார்சிலோனா அணியின் லியோனல் மெஸ்ஸி 598 கோல்கள் அடித்துள்ளார்.

இதனைத் தற்பொழுது, ரொனால்டோவின் ரசிகர்கள் மட்டுமின்றி, உலகக் கால்பந்து ரசிகர்கள் அனைவருமே கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS