மீண்டும் பயிற்சியாளராக ரவி சாஸ்த்ரி தேர்வு! கபில்தேவ் அறிவிப்பு!

17 August 2019 விளையாட்டு
kapildev1.jpg

இந்திய கிரிக்கெட் அணிக்குப் பயிற்சியாளராக, ரவி சாஸ்த்ரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நேற்று பேட்டியளித்த கபில் தேவ், 2021ல் நடைபெற உள்ள உலக டி20 போட்டித் தொடர் வரை, ரவி சாஸ்த்ரியே பயிற்சியாளராக நீடிப்பார் என தெரிவித்தார்.

கிரிக்கெட் அட்வைசரி கமிட்டியின் தலைவராக இருக்கும், கபில்தேவ் தலைமையிலான குழுவில் மூன்று பேர் இருந்தனர். இவர்கள் இந்திய கிரிக்கெட் அணிக்குத் தகுந்த பயிற்சியாளரை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டு இருந்தனர். இந்நிலையில், இரண்டாயிரம் பேர், இப்பதவிக்கு விண்ணப்பித்துள்ளதாக, கபில்தேவ் ஏற்கனவே அறிவித்து இருந்தார்.

இந்நிலையில், 2007ம் ஆண்டு நடைபெற்ற உலக டி20 போட்டிக்கு, இந்திய அணிக்கு மேனஜராக இருந்த லால்சண்ட் ராஜ்புத், முன்னாள் இந்திய அணியின் பீல்டிங் கோச்சான ராபின் சிங், 2007ம் ஆண்டு இலங்கை அணிக்கு பயிற்சியாளராக இருந்த டாம் மூடி, 2015ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்குப் பயிற்சியாளராக இருந்த மைக் ஹெசன் மற்றும் ரவி சாஸ்த்ரி ஆகியோர் இறுதியாக பிரித்து எடுக்கப்பட்டனர்.

இதில் ரவி சாஸ்த்ரிக்கே இந்தப் பதவியை வழங்கலாம் என, குழுவினர் ஒரு மனதாக தீர்மானம் எடுத்ததால், ரவி சாஸ்த்ரியை பயிற்சியாளராக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த விஷயத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு தொடர்பு இல்லை என்றும், அவரிடம் இதுப் பற்றிக் கருத்துக் கேட்கவில்லை எனவும், கபில்தேவ் கூறினார். விராட் கோலிக்கும், ரவி சாஸ்த்ரிக்கும் இடையில், நல்லதொரு நட்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS