விக்ரம் லேண்டரைத் தேடும்பணி தீவிரம்! ஆர்பிட்டர் மூலம் ஆராய்ச்சி செய்யும் இஸ்ரோ விஞ்ஞானிகள்!

08 September 2019 அரசியல்
ramjethmalani.jpg

இந்தியாவின் மூத்த வழக்கறிஞரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ராம்ஜெத்மலானி இன்று காலாமானார். அவருக்கு வயது 95.

உடல்நலக்குறைவால், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த ராம்ஜெத்மலானி, இன்று காலை மரணமடைந்தார். அவருடைய பூத உடலுக்கா பாஜக தலைவர் திரு.அமித்ஷா, நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.

இந்தியாவின் பெரும் வழக்குகளில், எவ்வித சிரமமுன்றி எளிதாக வென்றவர். இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, உட்பட பலரின் கொலை வழக்குகளில், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடியவர். தமிழக முன்னாள முதல்வர். செல்வி. ஜெயலலிதா அவர்களின் சொத்துக் குவிப்பு வழக்கில், அவருக்கு ஆதரவாக வாதாடி, ஜாமீன் வாங்கித் தந்தார்.

1923ம் ஆண்டு பிறந்த மலானி, பாகிஸ்தானில் உள்ள சிந்தி மாகாணத்தைச் சேர்ந்தவர். இருப்பினும், சுதந்திரத்திற்குப் பிறகு, இந்தியாவிலேயே வாழ்ந்தார். அவர் பள்ளிப் படிக்கின்ற காலம், முதல் பட்டம் படிக்கும் காலம் வரை, மிகத் திறமை வாய்ந்த மாணவராக இருந்தவர். வாஜ்பாயின் மிக நம்பிக்கையான மனிதர்களுள் ஒருவராகவே, இந்த ராம்ஜெத்மலானி இருந்து வந்தார்.

இன்று அவருடைய உடல் மாலை, லோதி சாலையில் அமைந்துள்ள மயானத்தில் அவருடைய உடலுக்கு இறுதி மரியாதை செய்யப்படுகிறது. ஒரு வழக்கறிஞர் இவ்வளவு பெயரும், புகழுடன் இருப்பது இதுவே முதல் முறை. பிரதமர் திரு நரேந்திரமோடி உட்பட பல தலைவர்கள், இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

HOT NEWS