நானும், வள்ளுவரும் மாட்டிக் கொள்ள மாட்டோம்! ரஜினிகாந்த் அதிரடி!

08 November 2019 சினிமா
rajinikanth123.jpg

இன்று, மறைந்த இயக்குநர் கே பாலச்சந்தரின் சிலை திறப்பு விழாவிற்கு வருகை தந்திருந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், வீட்டிற்கு திரும்பும் பொழுது, செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது, அவர்கள் கேட்ட கேள்விக்குப் பதிலளித்தார்.

உங்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டுள்ளது என்ற நிருபரின் கேள்விக்கு, அதற்கு என்னுடைய நன்றிகள். உள்ளாட்சித் தேர்தலில் நிற்க வாய்ப்புள்ளதா என்ற நிரூபரின் கேள்விக்கு, இல்லை வாய்ப்பு இல்லை கிடையாது என்றார்.

பொன் ராதாகிருஷ்ணன், நீங்கள் பாஜகவில் இணைய வேண்டும் என்று கூறுகிறார். உங்களை சந்திக்கிறார். அதனைப் பற்றி எதாவது விவாதிக்கப்படுகிறதா, பேசப்படுகிறதா என நிரூபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த ரஜினிகாந்த், அவர்கள் என்னிடம் அப்படி எதுவும் பேசவில்லை. இன்னொரு விஷயம், எனக்கு பாஜக வண்ணம் பூச முயற்சிக்கின்றார்கள். திருவள்ளுவருக்கு காவி பூசுவதைப் போல, எனக்கும் பூச முயற்சிக்கிறார்கள். நானும் மாட்டமாட்டேன், திருவள்ளுவரும் மாட்டாமாட்டார் என கூறிவிட்டு சென்றார்.

HOT NEWS