உலக தடகளப் போட்டி! தங்கம் வென்ற அமெரிக்கர்!

29 September 2019 விளையாட்டு
christiancoleman.jpg

உலகத் தடகளப் போட்டி, கத்தார் நாட்டின் தோஹா நகரில் நடைபெற்று வருகின்றது. இதில், ஆண்களுக்கான 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் அமெரிக்க வீரர் கிரிஸ்டியேன் கோல்மேன் 9.76 வினாடிகளில், இலக்கினைக் கடந்து தங்கப் பதக்கம் வென்றார்.

அவரைத் தொடர்ந்து ஜஸ்ட்டின் காட்லின் 9.89 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கத்தையும், கனடாவின் ஆன்ட்ரி டி கிராஸ் வெண்கலப் பதக்கத்தையும் தட்டிச் சென்றனர்.

நேற்று நடைபெற்ற மற்றொருப் போட்டியில், பத்தாயிர் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில், நெதர்லாந்தின் சிஃபான் ஹசன் 30 நிமிடம் 17.63 வினாடிகளில் கடந்து தங்கம் வென்றார்.

HOT NEWS