பிவி சிந்து தொடர் தோல்வி! சீனாவிலும் தோல்வியைத் தழுவினார்!

06 November 2019 விளையாட்டு
pvsindhu.jpg

உலக சாம்பியன் பட்டம் பெற்ற பொழுது, வெற்றியின் உச்சியைத் தொட்ட பிவி சிந்து, தொடர்ந்து நான்காவது முறையாக முதல் சுற்றிலேயே வெளியேறி அதிர்ச்சித் தந்துள்ளார்.

சீனாவில் நடைபெற்று வரும் சர்வதேச பேட்மிட்டன் போட்டியில், இந்தியாவின் பிவி சிந்துவும், தைவான் நாட்டினைச் சேர்ந்த பையும் மோதினர். உலக தர வரிசைப்பட்டியலில் ஆறு இடத்தில் உள்ள பிவி சிந்து, 42வது இடத்தில் உள்ள பையை எளிதாக வெல்வார் எனக் கணிக்கப்பட்டது.

இருப்பினும், தன்னுடைய சாதூர்யமான ஆட்டத்தால் பை, சிந்துவை வீழ்த்தினார். பிவி சிந்து 13-21, 21-18, 19-21 என்ற நேர் செட்களில் தோல்வியைத் தழுவி வெளியேறி ஏமாற்றம் அளித்துள்ளார்.

HOT NEWS