புரோட்டீன் பவுடர் எடுப்பவரா நீங்கள்?

12 June 2019 உடல்நலம்
proteinpowder.jpg

பொதுவாக, ஜிம்முக்கு சென்று, உடலை கட்டழகாக வைத்திருக்க ஆசைப்படாத ஆண்கள் இல்லை. தற்பொழுது, பெண்களும் ஜிம்முக்கு சென்று உடலைக் கட்டழகாக வைத்திருக்க முயற்சிக்கின்றனர். இதற்காக, டயர்ட் உணவுகள், காய்கறிகள், ஸ்டிராய்டு மருந்துகள் மற்றும் மருந்து ஊசிகள் என பலவகையானப் பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்.

இவைகளில், உணவுகளும், காய்கறிகளும் மிக ஆரோக்கியமானவை. அதேசமயம், எந்த விதப் பக்க விளைவுகளையும் இந்த உணவுகள் தருவதில்லை. ஆனால், மற்றவை மிகவும் மோசமானவை. கண்டிப்பாக, பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.

உடல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளோருக்கு அதிகமாகத் தேவைப்படுவது புரோட்டின். இதனை நாம் மாவுச் சத்து நிறைந்த உணவுகளிலேயேப் பெறலாம். ஆனால், அதற்கும் நாம் சோம்பேரித்தனம்படுகின்றோம். வேலை மெனக்கெட்டு, காய்கறிகளை வாங்கி, அவித்து, வேகவைத்து உண்பதில் பாதி பேருக்கும் மேல் விருப்பமில்லை.

மெல்லிய உடலை உடையவர்கள், புரோட்டீன் பவுடர்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால், உடல் ஒரு மாதத்திலேயே நல்ல பெரிதாக மாறிவிடுகிறது. புரோட்டீன் பவுடர்களை எடுத்துக் கொள்வதற்கு ஏற்றாற்போல், ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு யாரும் செய்வதில்லை. ஜிம்மிற்கு செல்வதன் பிரதான நோக்கமே, நம் உடலில் உள்ள தேவையற்ற நீர் மற்றும் கொழுப்பினை கரைத்து, நல்ல உடல் வலிமை பெறுவது தான். ஆனால், தற்பொழுது, அனைவரும் உடல் பயிற்சியை சரியாகச் செய்வதைக் காட்டிலும், உடனடியாக சிக்ஸ் பேக் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே செல்கின்றனர்.

இதன் காரணமாக, இத்தகைய புரோட்டீன் பவுடர்களை பயன்படுத்துகின்றனர். இதன் பக்க விளைவுகளைப் பற்றி ஜிம் மாஸ்டர்களும், உடன் பயிற்சி செய்பவர்களும் கூறுவதில்லை. இதற்கு, இதைப் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாததேக் காரணம் ஆகும்.

ஹார்வர்ட் யூனிவர்சிட்டி செய்த ஆய்வின் முடிவில் பல திடுக்கிடும் உண்மைகளை வெளியிட்டுள்ளது. அதன் படி, பல புரோட்டீன் பவுடர்களை இன்று உலகளவில் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக, நல்ல உடல் எடையையும் அடைந்து விடுகின்றனர். ஆனால், அந்த உடல் மீண்டும் குறைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. நல்ல உடற்பயிற்சி செய்யாவிட்டால், கண்டிப்பாக உடல் எடை மேலும் கூடும் என எச்சரிக்கின்றனர்.

இந்தப் பவுடர்களின் உச்சபட்ச பாதிப்பாக, கல்லீரல் பாதிப்பு, கணையம், மற்றும் சிறுநீரக செயலிழப்புப் போன்றவை ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன.

பல புரோட்டீன் பவுடர்கள் போலியானவை என ஒரு ஆய்வின் அறிக்கைத் தெரிவிக்கின்றது. மேலும், உலகளவில் பிரசித்தப் பெற்ற வே புரோட்டீன் (whey protein) பவுடர் உட்பட பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவையே.

HOT NEWS