பிங்க் பாலில் நாளை டெஸ்ட் போட்டி! கங்குலி பரவசம்!

21 November 2019 விளையாட்டு
pinkball.jpg

நாளை கொல்கத்தாவில் நடைபெறும், இந்தியா-வங்கதேசம் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியானது இரவு பகல் போட்டியாக நடைபெற உள்ளது. இதற்காக, கொல்கத்தாவின் பல பகுதிகளில் பிங்க் நிற லைட்டுகள் மின்னுகின்றன.

இந்த ஆட்டத்தில், பிங்க் நிற கிரிக்கெட் பந்து பயன்படுத்தப்பட உள்ளது. பொதுவாக, டெஸ்ட் போட்டிகளில் சிவப்பு நிறப் பந்துகளையேப் பயன்படுத்துவர். ஒருநாள் போட்டிகளில் வெள்ளை நிறப் பந்துகளைப் பயன்படுத்துவர். ஆனால், இந்தப் போட்டியானது, இரவு பகல் போட்டியாக நடைபெறுவதால், இரண்டிற்கும் பொதுவாக பிங்க் நிறத்தில் உருவாக்கப்பட்டு உள்ளன.

இந்த ஆட்டமானது, கொல்கத்தாவில் நாளை மதியம் ஒரு மணிக்கு ஆரம்பமாக உள்ளது. கொல்கத்தாவில் பனியின் காரணமாக, மாலை நானகு மணிக்கு சூரிய அஸ்தமனம் நடைபெறுவதால், விரைவாகவே மைதான விளக்குகளைப் பயன்படுத்த உள்ளனர். மேலும், பொதுவாக அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்கும் நான்கு மிமீ அளவிற்கு புல் வளர்க்கப்படும். ஆனால், இந்த பிங்க் பாலிற்காக ஆறு மிமீ அளவிற்கு புல் வளர்க்கப்பட்டு உள்ளது. இந்த ஆட்டத்தில் பாலானது, அதிக ஸ்விங் ஆகும் வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டும் உள்ளது.

இந்த ஆட்டமானது, பாரா மிலிட்டரி வீரர்களின் சாகச நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இந்த ஆட்டத்திற்கான, பிங்க் நிறப் பந்தினை பாரா மிலிட்டரி வீரர்கள் பாராசூட் மூலம் பறந்து வந்து எடுத்துத் தர உள்ளனர். இந்தப் போட்டியினைக் காண, வங்கதேச பிரதமர் ஷேக் ஹஸினாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சௌரவ் கங்குலி, பிசிசிஐ அமைப்பின் தலைவராக பதவியேற்றப் பின், இந்தப் போட்டியினை முதன் முதலாக நடத்துகின்றார். கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், ஆஸ்திரேலியாவிற்கும், நியூசிலாந்திற்கும் இடையே இரவு பகல் டெஸ்ட் போட்டி நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS