பப்பாளியிம், உடல் பொலிவும்

10 March 2019 உடல்நலம்
power-star-srinivasan.jpg

பப்பாளி அதிகளவில் உண்பதால் உடலில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புண்டு. ஆனால், அதே சமயம் அளவாக எடுத்துக் கொண்டால் நம் உடலில் சேரும் கழிவினை நீக்கி, உடலையும், இரத்தத்தையும் சுத்தம் செய்கிறது. தக்காளியைப் போலவே இதிலும் அதிகளவில் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளதால், நம்முடைய சருமத்திற்கு மிகவும் நல்லது. இதில் அதிகளவில் செரிமாணத்திற்கு உதவும் புரதங்களும் வைட்டமின்களும் செரிந்து உள்ளதால் நம்முடைய செரிமாண மண்டலத்திற்கு மிகவும் உறுதுணையாக உள்ளது.

பப்பாளியை அரைத்துப் பசையாக்கி, அதனை முகத்தில் தடவி சுமார் 20 நிமிடங்கள் ஊர வைக்க வேண்டும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவினால் முகத்தில் படியும் அழுக்குகள் மறையும் மேலும் முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பிசுபிசுப்பும் நீங்கும். வாரத்திற்கு ஒரு முறை பப்பாளி மாஸ்க் செய்து அதனை முகத்தில் பூசுவதன் மூலம், பளபளப்பான சருமத்தை நாம் தக்க வைத்துக் கொள்ள முடியும். இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை உருவாக்கும் சக்திப் பெற்றது. எனவே, இதனை அதிகளவில் முகத்தில் பூசி மஸாஜ் செய்வதன் மூலம் வயதான தோற்றம் ஏற்படாமல் என்றும் 16 என இருக்க இயலும்.

பப்பாளிப் பசையை வெள்ளரிச் சாற்றுடன் சேர்த்து கலந்து முகத்தில் பூசி மஸாஜ் செய்ய வேண்டும். பின்னர், சிறிது நேரம் கழித்து வெவெதுப்பான நீரில் கழுவினால் முகம் மிருதுவாகவும், புத்துணர்ச்சியுடனம் காணப்படும்.

பப்பாளியை உணவில் தினமும் சேர்த்துக் கொள்வதன் மூலம் புற்றுநோயிலிருந்து நம்மைக் காக்க இயலும் என ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன. பப்பாளியை வட்டமாக வெட்டி கண்களில் வைத்து மூடுவதன் மூலம், கண்களின் கூர்மைத் திறன் அதிகரிக்கும். ஆனால், பப்பாளியிலிருந்து வெளி வரும் பால் கண்ணில் படாமல் பார்த்துக் கொள்வது மிக அவசியம். இல்லை என்றால், நம் கண்களை அது மிகவும் பாதிக்கும்.

இப்பழத்தை கர்ப்பிணிப் பெண்களும், சுவாசப் பிரச்சனை உள்ளவர்களும் உண்ணக் கூடாது. அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

HOT NEWS