அதிரடி வீடியோ வெளியிட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரன் மற்றும் சித்ரா!

07 January 2020 சினிமா
pandianstores.jpg

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த நாடகத்தில் நடிகர் குமரன் மற்றும் சித்ரா ஆகியோர் இருவரும் கணவன்-மனைவியாக நடித்து உள்ளனர்.

குடும்பக் கதையாக நகரும் இந்த நாடகத்தில், இருவருடைய நடிப்பும் அனைவராலும் பாராட்டப்படும் விதத்தில் உள்ளது என, ரசிர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே, சித்ரா மற்றும் குமரன் இடையே சண்டை எனவும், இருவரில் ஒருவர் இந்த நாடகத்தினை விட்டு வெளியேறப் போகின்றனர் எனவும் தகவல்கள் அடிபட்டன. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த சித்ரா, நான் தற்பொழுது இந்த நாடகத்தில் இருந்து விலகப் போவதில்லை என உறுதியாகத் தெரிவித்தார்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், நடிகர் குமரன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிரடி வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில், காலம் மாறும், நான் முன்பே கூறியது போல, எனக்கும் சித்ராவுக்கும் இடையில் எவ்விதப் பிரச்சனையும் இல்லை. நாங்கள் இருவரும் நண்பர்களே என்று பேசியுள்ளார். அதில், நடிகை சித்ராவும் அதற்கு விளக்கமளித்துள்ளார். நண்பர்களுக்கு இடையில், சிறு சிறு சண்டைகள் வருவது தவிர்க்க இயலாதது எனவும், எங்களைப் பற்றி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் கூறியுள்ளனர்.

இந்த வீடியோவினால், தற்பொழுது பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்கள் மட்டுமின்றி, சித்ரா மற்றும் குமரன் ரசிகர்களும் மகிழ்ச்சிக் கடலில் உள்ளனர். இருவருடைய காதல் காட்சிகள் தற்பொழுது, வைரலாக பேசப்பட்டு வரும் விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS