ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த பாகிஸ்தான்! ஆனாலும் பிரச்சனை முடியவில்லை!

18 October 2019 அரசியல்
taliban.jpg

தீவிரவாதிகளுக்கு பண உதவி உட்பட பல விதத்தில் உதவுவதாக, பாகிஸ்தான் மீது எப்.ஏ.டி.எப் அமைப்பில் புகார் கூறப்பட்டது. இதனால், அந்நாட்டினை கிரே நிறப் பட்டியலில் சேர்த்தது எப்.ஏ.டி.எப்.

இந்நிலையில், தற்பொழுது வெளியாகி உள்ள தகவலின் படி, தொடர்ந்து, பாகிஸ்தான் கிரே பட்டியலிலேயே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று, பாகிஸ்தான் கருப்பு நிறப் பட்டியலுக்கு மாற்றப்படும் என அனைத்து நாடுகளும் எதிர்ப்பார்த்தது குறிப்பிடத்தக்கது. ஒரு வேளை, கருப்பு நிறப்பட்டியலுக்கு மாறப்பட்டால், அந்நாட்டின் மீது பொருளாதாரம் சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

எப்.ஏ.டி.எப் அமைப்பு பாகிஸ்தான் நாட்டிற்கு எச்சரிக்கை ஒன்றினையும், கெடு ஒன்றினையும் விதித்துள்ளது. அதன்படி, வரும் பிப்ரவரி, 2020க்குள் தீவிரவாதம் குறித்தப் புகார்கள் இல்லாதபடி, தீவிரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இல்லையென்றால், கண்டிப்பாக கருப்பு நிறப் பட்டியலுக்கு பாகிஸ்தான் மாற்றப்பட்டு விடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்பொழுது தீவிரவாதிகளை கைது செய்யும் செயலில் பாகிஸ்தான் அரசு மும்முரம் காட்டி வருகின்றது.

HOT NEWS