நிர்பயா வழக்கில் கருணை மனுவினை தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

24 January 2020 அரசியல்
nirbhayacase.jpg

டெல்லியில் நிர்பயா என்ற பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் நான்கு பேருக்கும் வருகின்ற பிப்ரவரி ஒன்றாம் தேதி அன்று, தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.

இதனிடையே, இவர்கள் தனித் தனியாக, தங்களுடைய கருணை மனுக்களை அனுப்பி வருகின்றனர். வினய் குமார் ஷர்மா மற்றும் முகேஷ் சிங் ஆகியோரின் கருணை மனுக்கள் ஏற்கனவே தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், தற்பொழுது அக்சய் குமார் சிங் மற்றும் பவன் குமார் சிங் ஆகியோரின் மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளன.

அவர்கள் தங்களுடைய மனுவில், சிறைத் துறை அதிகாரிகள் கருணை மனுவிற்கான போதிய ஆவணங்களை வழங்கவில்லை என நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இதனை நீதிமன்றம் விசாரித்தது. அதற்கு குற்றவாளிகள், நீதிமன்றத்தினை ஏமாற்றுவதாகவும், தண்டனைக் காலத்தினை தள்ளிக் கொண்டே இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து, குற்றவாளிகள் அக்சய் குமார் சிங் மற்றும் பவன் குமார் சிங்கின் மனுக்கல், சரியாக இல்லை என தள்ளுபடி செய்யப்பட்டது.

HOT NEWS