கிரிக்கெட் விளையாடும் போது சிறுநீர் வந்துவிட்டது! தெறித்து ஓடிய வீரர்!

24 October 2019 விளையாட்டு
nigerianplayer.jpg

விளையாட்டுப் போட்டிகளின் பொழுது, நடக்கும் சேட்டைகளும், எதிர்பாராத சம்பவங்களும் நம்மை மகிழ்விக்கவும் செய்கின்றது. அழவும் வைக்கின்றது. அந்த வகையில், தற்பொழுது ஒரு நகைச்சுவையான நிகழ்வு ஒன்று நிகழ்ந்துள்ளது.

ஐசிசி நடத்தும் உலக டி20 தகுதிச் சுற்றுப் போட்டியில், கனடா மற்றும் நைஜீரியா அணிகள் மோதி வருகின்றன. அதில், கனடா அணி 20 ஓவரில், 7 விக்கெட்டுகளை இழந்து, 159 ரன்கள் குவித்தது. 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன், நைஜீரியா அணி களமிறங்கியது.

அப்பொழுது, அந்த அணியின் தொடக்க வீரர்கள் வெறும் 30 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டனர். அப்பொழுது களத்தில் இருந்த, ரன்ஸ்வீ 18 ரன்களுடன் களத்தில் இருந்தார். திடீரென்று, கையில் இருந்த பேட்டினை மைதானத்திலேயே போட்டுவிட்டு, வேகமாக வீரர்கள் அறைக்கு ஓடினார். அனைவரும் குழப்பத்துடன் அவரைப் பார்த்தனர். அப்பொழுது, அவருக்குப் பதிலாக அடுத்த வீரர் தயாராகி களத்திற்குள் இறங்கிவிட்டார்.

ஆனால், அம்பையர் அவரை வெளியே செல்லும் படி கூறிவிட்டார். இதனால், என்ன நடக்கின்றது என, நைஜீரியா அணி வீரர்களுக்கும் புரியவில்லை. அப்பொழுது, உள்ளே களத்தில் இருந்த மற்றொரு வீரரான ஒனிகோயீ, ரன்ஸ்வீ திரும்ப வருவார் எனக் கூறினார். இதனால், அனைவரும் அவரை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருந்தனர். வேகமாக வெளியே வந்த ரன்ஸ்வீ, உடைகளை சரிசெய்து கொண்டு மீண்டும் விளையாட ஆரம்பித்தார். இதனால், இப்போட்டியினைப் பார்த்த ரசிகர்கள் அனைவரும், சிரிக்க ஆரம்பித்து விட்டனர்.

ஆட்ட நேர முடிவில், நைஜீரியா அணி 20 ஓவரில், எட்டு விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்துத் தோல்வியைத் தழுவியது. தற்பொழுது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

HOT NEWS