அட்டகாசமான சிறப்பம்சங்களுடன் புதிய நோக்கியா 6.2!

11 October 2019 தொழில்நுட்பம்
nokia6.2.jpg

நோக்கியா நிறுவனம், 6.2 என்ற புதிய ஸ்மார்ட் போனினை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம், மீண்டும் தன்னுடைய இடத்தினைப் பிடிக்க இயலும் எனவும் நம்புகின்றது.

நோக்கியா நிறுவத்தினை, தெரியாத மனிதர்களே இல்லை எனும் அளவிற்கு, உலகப் பிரபலமானது. இருப்பினும், புதிய தொழில்நுட்பங்களுக்கு மாற்றிக் கொள்ள இயலாததால், அந்த நிறுவனம் பின்னோக்கி சென்றது. இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், மீண்டும் சந்தைக்கு வந்தது. ஆனால், பெரிய அளவில் அதனால், வெற்றியை பெற இயலவில்லை.

தற்பொழுது, புதிய 6.2 என்ற ஸ்மார்ட் போனினை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன், 6.3 இன்ச் ஹெச்டி டிஸ்பிளேயுடன், கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் ஆண்ட்ராய்டு 9.0 தொழில்நுட்பத்துடன், ஸ்நாப்ட்ராகன் சிப் செட்டுடன் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த போனில், 1.8 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் பிராசஸர் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதே போல், அட்ரினோ 509 கிராபிக்ஸ் கார்ட் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதனால், இந்த போனில், பெரிய கேம்களையும் எளிதாக, எவ்வித பிரச்சனையும் இன்றி விளையாட இயலும்.

இதில் 16எம்பி, 8 எம்பி மற்றும் 5எம்பி கேமிராக்கள் முதன்மை கேமிராக்களாக உள்ளன. அதே போல், 8 எம்பி செல்ஃபி கேமிராவும் இதில் உள்ளது. இந்த போனில் 3500எம்ஏஹெச் பேட்டரி இணைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, நோக்கியா என்றாலே, நீடித்த பேட்டரி தான் நமக்கு ஞாபகத்திற்கு வரும். அது இந்தப் போனில் சற்று ஏமாற்றத்தினை அளிக்கின்றது. பிங்கர் பிரிண்ட் சென்சார் உட்பட பல சிறப்பம்சங்கள் இந்த ஸ்மார்ட் போனிலும் உள்ளன.

3 ஜிபி ரேம் 32 ஜிபி ரோம், 4 ஜிபி ரேம் 64 ஜிபி ரோம், 4ஜிபி ரேம், 128 ஜிபி ரோம் என இதில் மெம்மரி வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதே போல், நாம் இதில், 512ஜிபி வரை மெமரி கார்டினைப் பயன்படுத்த இயலும்.

இவ்வளவு சிறப்பம்சங்கள் நிறைந்த ஸ்மார்ட்போன், இந்த மாத இறுதிக்குள் இந்திய சந்தைக்கு வந்துவிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

HOT NEWS