பிக்பாஸ்3 வெற்றி பெற்றார் முகின்! கலக்கிய கமல்!

07 October 2019 சினிமா
mugenrao.jpg

நேற்று நடைபெற்ற இறுதி நாள் விழாவில், பிக்பாஸ்3 நிகழ்ச்சியில் பாடகர் முகின் வெற்றி பெற்றார்.

கடந்த 105 நாட்களாக நடைபெற்று வந்த பிக்பாஸ்3 தமிழ் நிகழ்ச்சி, நேற்றுடன் முடிவடைந்தது. இதில் பங்குபெற்ற போட்டியாளர்களில், முகின், சாண்டி, ஷெரின் மற்றும் லாஸ்லியா ஆகியோர் கடைசி நாள் ஆட்டத்திற்குத் தகுதி பெற்றனர்.

இதில், ஷெரின் நேற்று வெளியேற்றப்பட்டார். அப்பொழுது, லாஸ்லியா, சாண்டி மற்றும் முகின் ஆகியோர் இருந்தனர். முகினுக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருந்த நிலையில், இந்த முறை முகின் தான் வெற்றிப் பெறுவார் என நம்முடைய டிவிட்டர் பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப் பதிவிலும், முகினே முன்னிலை வகித்தார்.

இந்நிலையில், லாஸ்லியாவும் வெளியேறினார். பின்னர், சாண்டி மற்றும் முகினுக்கு இடையே கடுமையானப் போட்டி நிலவியது. இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குச் சென்ற கமல்ஹாசன், அவர்கள் இருவரையும், வாகனத்தில் அமர வைத்து பிக்பாஸ்3 மேடைக்கு அழைத்து வந்தார். வரும் வழியில், அவருடைய ராஜா கையவச்சா பாடலுக்கு நடனமும் ஆடினார். பின்னர், மேடைக்கு அவர்களை அழைத்து வந்த கமல்ஹாசன், அவர்களில் முகின் வெற்றிப் பெற்றார் என அறிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், நடிகை வனிதா நடனம் ஆடினார். மேலும், பல கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. நேற்று கமல்ஹாசனின், செயல்களையும், அவருடைய நிகழ்ச்சி தொகுத்து வழங்கும் விதத்தையும், அனைவருமே சமூக வலைதளங்களில் பாராட்டித் தள்ளினர். முகினுக்கு, அந்த நிகழ்ச்சியின் நிர்வாகி ரூபாய் 50 லட்சம் காசோலையை வழங்கி கௌரவித்தார். முகின் வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து, அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதனைக் கொண்டாடி வருகின்றனர்.

HOT NEWS