பாஜகவில் தல தோனி! விரைவில் அறிவிப்பு?

13 July 2019 விளையாட்டு
dhoniform.jpg

பாஜகவில் தல தோனி இணைய உள்ளதாக பாஜகவின் மூத்த தலைவருள் ஒருவரான, சஞ்சய் பஸ்வான் கூறியிருக்கிறார்.

தோனி தற்பொழுது நடைபெற்று முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருடன் ஓய்வுப் பெறப் போவதாக, செய்திகள் வெளிவந்தன. இதனைத் தொடர்ந்து, பலரும் தங்களுடைய ஆதரவையும், அன்பையும் வெளிக்காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், நீண்ட நாட்களாக தோனியுடன் இது பற்றிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் தோனி நம் கட்சியில் சேருவார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளதாகவும் கூறியிருக்கிறார். தோனி ஓய்வு பெற்ற பின் என்ன செய்வார், என பலரும் தங்களுடைய யூகங்களை வெளிப்படுத்தி வந்த நிலையில், இவர் இவ்வாறு கூறியிருப்பது, அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

HOT NEWS