நேபாளம் கிளம்பிய ஜிங்பிங்! டெல்லி திரும்பும் மோடி!

12 October 2019 அரசியல்
modixijingping.jpg

நேற்று, இந்தியாவிற்கு இரண்டாவது முறைசாறா கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்திருந்தார் சீன அதிபர் ஜீ ஜிங்பிங். அவரை வரவேற்க, இந்திய பிரதமர் மோடியும் வருகை தந்திருந்தார்.

சென்னை வந்த ஜிங், அவருடைய காரில், மாமல்லபுரத்தினை அடைந்தார். அங்கு மாலையில், மோடியுடன் சேர்ந்து மாமல்லபுரத்தினை சுற்றிப் பார்த்தார். பின்னர், அங்கு நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு, நிகழ்ச்சிகளை ரசித்தார்.

பின்னர், அங்கிருக்கும் கோவளம் தாஜ் பிஷர்மேன் கோவ் விடுதியில், இருவரும் தங்கினர். இன்று காலையில், கடற்கரையில் நடைபயிற்சி மேற்கொண்டு பிரதமர் மோடி, அங்கு கிடந்த குப்பைகளை நீக்கும் பணியிலும் ஈடுப்பட்டார். பின்னர், காலை 10.20 மணியளவில், சீன அதிபர் ஜிங்பிங் ஹோட்டலுக்கு வந்தார். அவரை, ஹோட்டல் வாசலில் காத்திருந்து அழைத்து சென்றார் மோடி.

அவர்கள் இருவரும், பேட்டரிக் காரில் ஏறிக் கொண்டு, கோவளம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, குண்டுதுளைக்காத கண்ணாடி அறையில், அமர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், இருவரும், கிளம்பினர்.

ஜிங் பிங்கினை அழைத்துக் கொண்டு, கண்காட்சிக்கு சென்ற மோடி, அங்கு ஜிங்கின் புகைப்படம் பொருந்திய, பட்டு சேலையை அவருக்கு பரிசளித்தார். அதே போல், மோடிக்கு, சீன பீங்கான் பொருளில் மோடி உருவம் பொறிக்கப்பட்ட தட்டினை, மோடிக்கு பரிசளித்தார் ஜிங்.

பின்னர், நேபாள அதிபர சந்திப்பதற்காக, நேபாளம் புறப்பட்டு சென்றார் ஜிங்பிங். போகும் பொழுது, சீனாவிற்கு, இந்தியப் பிரதமர் வர வேண்டும் என அழைப்பும் விடுத்துள்ளார். இந்த சந்திப்பு மகிழ்ச்சிகரமாக முடிந்துள்ளது என மோடியும் கூறினார். பின்னர், இருவரும் கிளம்பினர். மோடி, தனி ஹெலிகாப்டரில் சென்னைக்கு கிளம்பினார். அங்கிருந்து அவர், டெல்லி செல்ல உள்ளார்.

HOT NEWS