அசுரன் படத்தைப் பாராட்டிய முக ஸ்டாலின்!

17 October 2019 அரசியல்
stalinasuran.jpg

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திரையறங்கில், திமுக தலைவரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர் கட்சித் தலைவருமான முக ஸ்டாலின், அசுரன் திரைப்படத்தினைப் பார்த்தார்.

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், நடிகர் தனுஷ் நடிப்பில், கலைப்புலி எஸ் தாணு தாயரிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். இத்திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் சூப்பர் டூப்பர் ஹிட்டாகி உள்ளது. மேலும், இத்திரைப்படம் தற்பொழுது வரை, 100 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக, படத்தின் தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்நிலையில், தூத்துக்குடியில் உள்ள திரையறங்கில், நேற்று அசுரன் திரைப்படத்தினை திமுக தலைவர் முக ஸ்டாலின் பார்த்தார். அதனைப் பற்றி அவர் செய்துள்ள ட்வீட்டில், அசுரன் படம் மட்டுமல்ல பாடம்! பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து, சாதிய சமூகத்தை சாடும்-சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்! கதை-களம்-வசனம் என வென்று காட்டியிருக்கும் வெற்றி மாறனுக்கும், வாழ்ந்து காட்டியிருக்கும் தனுஷிற்கும் பாராட்டுக்கள்! என தன்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

HOT NEWS