மெய் திரைவிமர்சனம்!

09 September 2019 சினிமா
mei.jpg

குற்றம் 23 வரிசையில் வெளியாகி உள்ள திரைப்படம் இந்த மெய். மருத்துவத் துறையில் ஏற்படும் குற்றங்களை வைத்துப் பெரும் அளவில், படங்கள் வந்ததில்லை. காரணம் என்னவென்றால், பெரிய அளவில் இதுகுறித்த விழிப்புணர்வு கிடையாது.

அதன் காரணமாக, அதைச் சார்ந்து உருவாக்கப்படும் படங்களும் பெரிய அளவில் ஹிட் ஆகுவதும் இல்லை. படத்தின் நாயகன் அமெரிக்காவில் படித்து, மருத்துவராக பணி புரிபவர். அவர் தாயின் மரணத்தின் காரணமாக, தமிழ்நாட்டிற்கு வருகிறார். அங்கு, தந்தையின் நண்பருடைய மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்கின்றார். அங்கு வரும் மெடிக்கல் ரெப்பாக வேலை செய்யும், ஐஸ்வர்யா ராஜேஷ் மீது காதல் வருகிறது. அப்பொழுது அங்கிருந்த ஒருவர் மரணமடைகின்றார்.

அதன் காரணத்தையும், அவர் மீது விழுகின்றப் பழியையும் கண்டுபிடித்தாரா? காதலியுடன் கைகோர்த்தாரா இல்லையா என்பது தான் கதை! படத்தின் கதாநாயகனான டாக்டர் எதற்காக மருத்துக் கடையில் வேலை செய்கிறார், ஒரு பெண் எப்படி, மெடிக்கல் ரெப்பாக இருப்பார் எனப் பல லாஜிக் ஓட்டைகள் இருக்கின்றன.

பெரிய அளவில் ஈர்க்கும் பாடல்களும் கிடையாது. ஆனாலும், படத்தின் கதை, நல்ல கதை என்பதால் மட்டுமே நம்மால் பார்க்க முடிகிறது. கதாநாயகன் புதுமுகம் என்பதை, எப்பொழுதாவது படம் பார்ப்பவர்கள் கூட, கண்டுபிடித்துவிடுவார்கள். அந்த அளவிற்கு சுமாராக நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் படத்தில் தன்னுடைய பங்கை, சிறப்பாக செய்துள்ளார். மெய் படத்தில் வரும் விஷயங்கள் ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இருந்தாலும், அது தான் உண்மை.

மெய் நிதர்சனமான உண்மை.

ரேட்டிங் 2.5

HOT NEWS