பிரபல நடிகர் மீது மீ டு புகார்!

16 November 2019 சினிமா
actorvinayakan.jpg

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடிப்பவர் விநாயகன். திமிரு. சிலம்பாட்டம், தனுஷின் மரியான் உட்பட பல படங்களில் நடித்தவர் இந்த விநாயகன். இந்த விநாயகன் தற்பொழுது, மல்லுவுட் எனப்படும் கேரளத் திரைப்படங்களில், நடித்து வருகின்றார்.

அவர் மீது, கேரள மாடல் அழகி மிருதுளா தேவி, மீ டூ புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில், கல்பட்டா பகுதி காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரித்தனர்.

இதனிடையே, அவர் ஜாமீனில் வெளி வந்துவிட்டார். அவர் மீதான குற்றப்பத்திரிக்கையை, நீதிமன்றத்தில் சமர்பித்தது கல்பட்டா காவல்நிலையம். அந்தக் குற்றப் பத்திரிக்கையில், அவர் குற்றத்தினை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதனைத் தொடர்ந்து, அடுத்த மாதம், இந்த வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது.

HOT NEWS