மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான அணியில் தவானுக்குப் பதில் இவர்! அணி அறிவிப்பு!

13 December 2019 விளையாட்டு
mayankagarwal.jpg

Pic Credit:twitter.com/mayankcricket

இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் வந்துள்ள மேற்கு இந்தியத் தீவுகள் அணி, மூன்று டி 20 போட்டிகள், மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில், மூன்று டி20 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. அதில், 2-1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிப் பெற்றது.

இதனையடுத்து, வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று முதல் ஒரு நாள் போட்டித் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், இந்திய அணியின் தொடக்க வீரராக விளையாட இருந்த ஷிக்கர் தவானுக்கு பதிலாக, மயங்க் அகர்வால் விளையாட உள்ளார்.

சயித் முஸ்தக் அலி டிராபியில் மஹாராஷ்டிராவிற்கு எதிராக விளையாடும் பொழுது, ஷிக்கர் தவானின் முழங்காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருடைய உடல் நிலையைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு ஓய்வு தேவைப்படுகின்றது என்றனர். இதனால், அவருக்குப் பதிலாக மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில், மயங்க் அகர்வால் விளையாடுவார் என, பிசிசிஐ அறிவித்துள்ளது.

India ODI squad: Virat Kohli (c), Rohit Sharma (vc), Mayank Agarwal, KL Rahul, Shreyas Iyer, Manish Pandey, Rishabh Pant (wk), Shivam Dube, Kedar Jadhav, Ravindra Jadeja, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Deepak Chahar, Mohammed Shami, Bhuvneshwar Kumar.

HOT NEWS