இந்து மதமும் மார்வெல் கதாபாத்திரங்களும்

05 May 2020 சினிமா
avengersendgame1.jpg

இந்து மதத்தில் வணங்கப்படும் கடவுள்களையும், கதாபாத்திரங்களையும் இன்று வரை எவ்விதப் பிரச்சனையும் இன்றி மார்வெல் நிறுவனம் பெயரை மாற்றிப் பயன்படுத்திவருகிறது. சரி, யார் யாருடன் தொடர்புபடுத்தி உருவாக்கப்பட்டுள்ளனர் எனப் பார்ப்போம்.

10. ஹீயூமன் டாரச்-அக்னி பகவான்

இந்த இருவருமே நெருப்பால் ஆனவர்கள். இவர்களை யாராலும் அழிக்க இயலாது. இவர்களால் வானில் பறக்க இயலும். எதனையும் எரித்து அழிக்க இயலும். அதே சமயம், தன்னுடைய சக்தியை தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மை உடையவர்.


9. ஸ்ட்ரோம்-வாயு பகவான்

வானிலையைக் கட்டுப்படுத்தும் முழு சக்தியும் இவர்களையே சாரும். இவர்களால் வானிலையை கட்டுப்படுத்த இயலும். காற்றைக் கட்டுப்படுத்தும் சக்தியும் இவர்களுக்கு உண்டு.

8.ஹாக் ஐ-அர்ஜீனன்

உலகளவில் இவர்கள் வைத்தக் குறியை யாராலும் மாற்ற இயலாது. இவர்களே சிறந்த வில்லாளிகள். இவர்கள் கையில் வில்லையும் அம்பையும் எடுத்தால், கண்டிப்பாக, குறி தவறாமல் அடித்துவிடுவர்.

7. நிக் ப்யீரி-கிருஷ்ணன்

இவர்களே இவர்கள் இருக்கும் அணியின் நாயகர்கள். இவர்களால் மட்டுமே, அனைத்து விதப் பிரச்சனைகளையும், மிகவும் அமைதியான முறையில் வெற்றிகரமாக சமாளித்து வெற்றிப் எற இயலும். இவர்கள் இருக்கும் அணியில் மிகவும் பலமான மற்றும் சக்தி வாய்ந்த வீரர்கள் இருப்பார்கள்.

6.ஐயர் மேன்-கர்ணன்

இவர்கள் மட்டுமே, கவசத்துடன் காணப்படுவர். ஐயர்மேனும், கர்ணனும் தன்னுடன் இருப்பவர்களை காப்பதில் மிகவும் முக்கியம் வாய்ந்தவர்கள்.

5.தோர்-இந்திரன்

இருவரும் இடியின் கடவுள்கள் ஆவர். இருவரின் ஆயுதமும் இடியாகும். இவர்கள் இருக்கும் இடமே புனிதமானதாகவும் அமைதியானதாகவும் இருக்கும்.

4. கேப்டன் அமெரிக்கா-ஸ்ரீராமர்

இவர்களை வெல்ல உலகில் யாரும் இல்லை. இவர்கள் பலப் பிரச்சனைகளையும், கஷ்டங்களையும் கடந்த பின்னரே வாழ்க்கையில் வெற்றி அடைந்தனர்.

3. ஹல்க்-ஹனுமான்

இருவரும் கோபம் கொண்டால் இவர்களின் உருவம் யாராலும் கணிக்க முடியாத அளவிற்கு பெரியதாக மாற்றிக் கொண்டு சண்டையிட ஆரம்பித்துவிடுவர். இவர்களால் நினைத்த இடத்திற்கு பறந்து செல்ல இயலும்.

2. தி லிவ்ங் ட்ரிபியூனல்-பிரம்மா

இவர்களே இப்பிரபஞ்சத்தின் படைப்பாளிகள். இவர்களுக்கு அனைத்தையும் பற்றிய அறிவு இருக்கும். இவர்களுக்கு நான்கு தலைகள் இருக்கும்.

1 தி ஒன் அபவ் ஆல்-மஹா விஷ்ணு

இவர்களைத் தாண்டி எதுவும் இல்லை. இவர்களே இவ்வுலகின் பரந்து விரிந்தவர்கள் ஆவர். இவர்களுக்கு அழிவு என்பது கிடையாது.

HOT NEWS